AIESEC in Sri Lanka: இலங்கையில் ஆளுமை மிக்க தலைமைத்துவத்தை ஊக்குவித்தலும் மாற்றத்தை உருவாக்குதலும்.

AIESEC in Sri Lanka ஆனது 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுமை மிக்க தலைவர்களை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்து வருவதுடன் இலங்கையின் முன்னேற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடாத்தப்படும் ஒரு அமைப்பான AIESEC இலங்கையில் பல்வேறு ஆரம்பகட்ட முயற்சிகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ளதுடன் ஏப்ரல் மாதம் 25ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் மாநாடு-2023 இனை நடாத்துவதன் மூலம் மேலும் வலுப்படுத்திக்கொண்டு செல்கிறது.

 AIESEC in Sri Lanka வின் தலைவரான திரு. கனீல் டயஸ் அவர்களின் கூற்றுப்படி, “AIESEC in Sri Lanka ஆனது கடந்த மூன்று தசாப்தங்களாக தேசத்திற்கான பல்லாயிரக்கணக்கான ஆளுமை மிக்க தலைவர்களை உருவாக்கி வருகின்றது. ஓவ்வொரு வருடமும் நாம் என்ன செய்கிறோம் எனும் அடிப்படையில் மட்டுமல்லாது அது ஏற்படுத்தும் மாற்றங்களிலும் முன்னேறியுள்ளோம். AIESEC ஆனது ஆசிய பசுபிக் மாநாட்டுடன் உலக அரங்கில் நாட்டுக்கான அங்கீகாரத்தை கொண்டுவருவதுடன் உலகிற்கு இலங்கையை மீண்டும் முன்னிறுத்துவதற்கு பங்களிக்கின்றது.” 

இம் மாநாடானது Global Village என்ற அடிப்படையில் வெவ்வேறு உலக நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதுடன் ‘Sri Lankan Night’ என்ற தொனிப்பொருளில் எங்கள் நாட்டினுடைய கலாச்சாரத்தையும் அம்மாநாட்டில் பிரதி பலித்து நிற்கின்றது.

லிசானி சூரியாம்பொல இம் மாநாடு பற்றி கூறுகையில், “இம்முறை ஏப்ரல் மாதம் AIESEC in Sri Lanka வினால் நடாத்தப்படுகின்ற ஆசிய பசுபிக் மாநாடு – 2023 ஆனது மிகவும் மதிப்புமிக்க மாநாடாக இருக்கின்றது. இம்மாநாடனது 20க்கு மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 150 ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை கொண்டதாக அமையும். ஆசிய பசுபிக் பிராந்தியங்களை ஒன்றிணைப்பதற்கும், ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக இணைந்த கலாசார புரிதலை வளர்ப்பதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பென நான் நம்புகிறேன்” என்கிறார்.

AIESEC in Sri Lanka ஆனது, 1995ல் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாக பல ஆண்டுகளுக்கு மேலாக பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது 25ற்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்டு, AIESEC in Sri Lanka உறுப்புரிமை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதுடன் எமது தனித்துவமான அபிவிருத்தி மாதிரியின் ஊடாக நாடு முழுதும் ஆளுமை மிக்க தலைவர்களை உருவாக்குவதற்காக விரிவடைந்துள்ளது. மேலும் AIESEC in Sri Lanka ஆனது இணை கலாசார புரிதலை ஊக்குவித்தல் மற்றும் தலைமைத்துவத்தை விருத்திசெய்தல் போன்றவற்றில் இளைஞர்களை வெளிக்கொணர்வதற்கான பல பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்கின்றது. இதற்கு மேலதிகமாக, தொழில் வழிகாட்டுதல் திட்டமான Amplifier, முக்கியமான தலைப்புக்களை விவாதிக்கும் SDG அடிப்படையிலhன இளைஞர் கருத்துகளமான Youth Speak Forum மற்றும் இலங்கையின் சமூகங்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள SDG ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் திட்டமான Youth4SriLankaஆகிய முயற்சிகளே அமைப்பை இன்று இந்நிலைக்கு இட்டு சென்று உள்ளது.

AIESEC in Sri Lanka மேலும் புதிய உயரங்களை எட்டுகையில், ஆசிய பசுபிக் மாநாடு 2023 ஆனது அமைப்பின் முக்கிய மைல்கற்களில் ஒன்றாக இருக்கும். நிறுவனத்துடன் பங்குதாரராக உள்ள பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து இளம் தலைவர்கள் ஆளுமை மிக்க தலைமையை அடைய புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் அது பெரு வளர்ச்சியை நோக்கி முன்னோக்கி செல்கிறது.

Photo Caption:

Image 01:

ஆசிய பசுபிக் பிராந்தியத்தினால் இலங்கையில் நடத்தப்படஉள்ள ஆசிய பசுபிக் மாநாடு 2023 இற்கான கைச்சாத்திடல்

படத்தில் உள்ளோர்:  திரு சச்சின் டிமட்டப்பிட்டிய – பிராந்திய பணிப்பாளர், ஆசிய பசுபிக் பிராந்தியம்  மற்றும் திரு கணீல் டயஸ் – தலைவர், AIESEC in SriLanka

Image 02:

AIESEC in SriLanka வின் தலைவர் கணீல் டயஸ், அடுத்த வருடத்துக்கான AIESEC in SriLanka வின் தலைவர் மினோல் ஜெயக்கோடி மற்றும் பொது தொடர்புகளுக்கான உப தலைவர் அபூர்வா ஏகாநாயக்க ஆகியோரின் பங்களிப்புடன் AIESEC in SriLanka வினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு

Share

You may also like...