2023 புரத தினம் : இவ்வருடத்தின் கருப்பொருள் ‘அனைவரும் புரதத்தை எளிதாக அணுகல்’ என ‘Right To Protein’ அறிவிக்கிறது

2023 ஆம் ஆண்டுக்கான புரத தினத்திற்கான கருப்பொருளை ‘அனைவரும் புரதத்தை எளிதாக அணுகல்’ அல்லது ‘புரத அணுகல்தன்மை’ என ‘Right To Protein’ (புரதத்திற்கான உரிமை) அமைப்பு அறிவித்துள்ளதோடு, உணவு மற்றும் புரதச் சத்தின் நிறைவான தன்மையை ஏற்படுத்தும் பணியில் தொழில்துறையினர் மற்றும் ஆர்வமுள்ள நபர்களை இணையுமாறு அழைப்பு விடுக்கிறது.

பெப்ரவரி 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் வருடாந்த புரத தினத்தை முன்னிட்டு, ‘Right To Protein’ எனும் புரத விழிப்புணர்வு திட்டமானது, 2023 ஆம் ஆண்டிற்கான அதன் கருப்பொருள் ‘அனைவரும் புரதத்தை எளிதாக அணுகல்’ என அறிவித்துள்ளது. நான்காவது வருடமாக இடம்பெறும் இந்நிகழ்வில், இக்கருப்பொருளானது புரத உணவுகளின் அணுகல் தொடர்பான கவனத்தின் தேவை, புரதம் மற்றும் சிறந்த போசாக்கு, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் அறிய வேண்டுமென மக்களை ஊக்குவிக்குவிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

சுமார் ஒரு பில்லியன் மக்கள்தொகையை கொண்ட தெற்காசியாவில், பிராந்தியத்தின் பல பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கட்டுப்படுத்த மூலோபாய ரீதியிலான மற்றும் அவசர நடவடிக்கைகள் தேவையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, ‘அனைவரும் புரதத்தை எளிதாக அணுகல்’ எனும் கருப்பொருள் ஆனது, நாளாந்த உணவுகளில் சேர்க்கப்படக்கூடிய, இலகுவாக அணுகக்கூடிய புரத உணவு மூலங்கள் மற்றும் ‘போசாக்கு பாதுகாப்பை’ உறுதிப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகளை மக்கள் தொடர்ந்து அறிந்து கொள்வதற்கான கலந்துரையாடல்களையும் தீர்வுகளையும் முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. .

‘Right To Protein’ திட்டத்தின் வலுவான ஆதரவாளரான கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போசாக்கு பிரிவின் தலைவர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில், “அனைவரும் புரதத்தை எளிதாகப் பெற இந்த சுதந்திர தினத்தில், உறுதிமொழி எடுப்போம்! இலங்கை, மீன் மற்றும் கோழி போன்ற கட்டுப்படியாகும் விலை கொண்ட, போசாக்கு நிறைந்த தெரிவுகள் உள்ளிட்ட உணவுகள், தாவர அடிப்படையிலான மற்றும் விலங்கு அடிப்படையிலான உள்நாட்டில் கிடைக்கும் புரத வளங்கள் நிறைந்த நாடாகும். எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடி காரணமாக, புரதச்சத்து நிறைந்த உணவுகளை கொள்வனவு செய்வது ஒரு பிரச்சினையாக உள்ளது. இது நமது உணவில் புரதக் குறைபாட்டிற்கு வழிவகுப்பதோடு, இது பல்வேறு மட்ட வயதினரிடையே போசாக்கு குறைபாடு ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. இந்த சிக்கலை நிவர்த்தி செய்வதற்கு, விழிப்புணர்வு மற்றும் எமது உணவில் புரதம் நிறைந்த உணவை சரியான முறையில் சேர்ப்பது அவசியமாகும். இந்த வருடம் புரத தினத்தை முன்னிட்டு, புரதம் நிறைந்த உணவுகளை நாட்டில் எளிதில் அணுகக்கூடியதாகவும், மக்கள் தொகைக்கு ஏற்ப மிகவும் மலிவானதாகவும் மாற்றுவதற்கான வழிகளை நோக்கிச் செயற்படும் அதே வேளையில், இத்தொழில்துறையில் உள்ள புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை அது தொடர்பில் கலந்துரையாடுமாறும் நான் ஊக்குவிக்கிறேன்.” என்றார்.

‘Right To Protein’ ஆதரவாளரும், அமெரிக்காவின் Soy SAASSA சந்தைப்படுத்தல் தலைவருமான தீபா கியானூலிஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், “புரத தினத்தின் இவ்வருடத்தின் கருப்பொருளின் அடிப்படையில், தெற்காசிய நாடுகளில் அணுகக்கூடிய பல்வேறு புரத உணவு மூலங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்ப உதவுகின்ற உரையாடல்கள், நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளில் பங்கேற்குமாறு அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம். மக்கள் தங்களின் தனிப்பட்ட புரதத் தேவைகள் மற்றும் கிடைக்கக்கூடிய பல்வேறு புரத உணவு மூலங்கள் தொடர்பில் அதிகளவு அறிந்திருப்பதை உறுதி செய்வதில் நாம் அனைவரும் பங்கு வகிக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். எமது உணவில் நிலைபேறான புரத தெரிவுகளைச் சேர்த்தல், அனைவருக்கும் போசாக்கிற்கான பாதுகாப்பு எனும் இலக்கை நோக்கி கூட்டாக பணியாற்றுதல் தொடர்பான கலந்தரையாடல்களை ஊக்குவிக்க நாம் விரும்புகிறோம்,” என்றார்.

இலங்கையை புரதச்சத்து நிறைந்த நாடாக மாற்ற, போசாக்கு நிபுணர்கள், உணவுத் தொழில்துறை வல்லுநர்கள், சமையல்கலை நிபுணர்கள், உணவு வர்த்தகநாமங்கள் மற்றும் ஒரே எண்ணம் கொண்ட மக்கள் போன்ற ஆதரவாளர்களுடன், 2023 ஆம் ஆண்டு புரத தினத்தைக் கொண்டாட, ‘Right To Protein’  தயாராக உள்ளது.

2023 பெப்ரவரி 27ஆம் திகதி #ProteinDay தினத்தை கொண்டாடுவதன் மூலம், ‘அனைவரும் புரதத்தை எளிதாக அணுகல்’ எனும் எண்ணக்கருவை ஊக்குவிக்க எம்முடன் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புரத தினம் மற்றும் அதில் நீங்கள் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்பது தொடர்பான மேலதிக தகவலுக்கு: https://righttoprotein.com/protein-day.html

Right To Protein பற்றி:

சிறந்த போசாக்கு, ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வுக்கு அவசியமான புரத உட்கொள்ளலின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான இந்தியாவின் முதலாவது விழிப்புணர்வு திட்டமே ‘Right To Protein’ ஆகும். #RightToProtein திட்டமானது, இந்தியர்களிடையே பல்வேறு வகையான புரத மூலங்களை, குறிப்பாக தாவர புரதம், பாரிய போசாக்கு இலக்குகளை அடைவது பற்றிய அறிவை வளர்ப்பதில் செயற்பட்டு வருகிறது. Right To Protein ஆனது, மனித ஆரோக்கியம் மற்றும் பல்வேறு புரத உணவு மூலங்களின் முக்கியமான பாரிய-போசாக்கு என, புரதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை நீக்குவதற்குமாக, நிபுணர்கள் கொண்ட தொகுதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தொகுதியானது, தாவர மற்றும் விலங்கு புரதங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு தரம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Right To Protein ஆனது, இந்தியா மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த ஒரே எண்ணம் கொண்ட பல தனிநபர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், நிறுவனங்களால் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது. அறிவு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குதல் அல்லது ஊக்குவிப்பு பங்குதாரர்கள் உள்ளிட்ட எந்தவொரு வகையிலேனும் இதில் இணைய அல்லது பங்களிக்க விரும்புவோரை இத்திட்டம் வரவேற்கிறது. மேலதிக தகவலுக்கு, www.righttoprotein.com எனும் தளத்தை பார்வையிடவும். அத்துடன் Twitter, Facebook, LinkedIn, Instagram இல் @righttoprotein என்பதை பின்தொடரவும்.

Share

You may also like...