“தைரியமான விளம்பர பிரசாரத்தின் மூலம் மாதவிடாய் தடைகளை சவால் செய்யும் Fems”
– உண்மையான சிவப்பு நிறமாக மாறுகிறது
மாதவிடாய் தொடர்பான பிழையான கருத்துகளை நீக்குவதற்கு உறுதிபூண்டுள்ள Fems, அதன் சமீபத்திய தொலைக்காட்சி விளம்பரம் மூலம், இலங்கையில் ஆரோக்கிய நப்கின் வகைகளின் விளம்பரத்தில் முதன்முறையாக மாதவிடாய் இரத்தத்தை சித்தரிக்க சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறது. அந்த வகையில் Hemas Consumer Brands நிறுவனத்திற்குச் சொந்தமான, பெண்களுக்கான முன்னணி சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமான Fems, இத்துறையில் உள்ள ஏனைய உற்பத்தியாளர்களும் அதன் பாதையைப் பின்பற்றும் வகையில், ஒரு அளவுகோலை நிறுவியுள்ளது. அதன் துணிச்சலான இந்நடவடிக்கையின் மூலம், ஒரு சாதாரண உடல் செயன்முறையாக இடம்பெறும் மாதவிடாய் நிகழ்வின் உண்மையைக் காண்பிப்பதன் மூலம், குறுகிய எண்ணம் கொண்ட சமூக ரீதியான பிழையான எண்ணங்களை அகற்றுவதன் மூலம் மாதவிடாய் தொடர்பான களங்கத்தை தகர்த்தெறிய முடியுமென இவ்வர்த்தகநாமம் நம்புகிறது. பாலின சமத்துவத்தை Fems ஊக்குவிப்பதோடு, முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாமென பெண்களை வலியுறுத்துவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிக்கிறது.
ஆரோக்கியமான தேசத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு சமூகப் பொறுப்புள்ள வர்த்தகநாமம் எனும் வகையில், Hemas Consumer Brands இனால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் ஒரு முன்னணி சுகாதாரப் பராமரிப்பே Fems ஆகும். இவ்வர்த்தகநாமத்தினால் தயாரிக்கப்படும் தற்போதுள்ள தயாரிப்பு வகைகள் அனைத்தும், தோல் நோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதோடு, SLS சான்றிதழ்கள் மூலம் அங்கீகாரத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் அனைத்து வயது பெண்கள் மத்தியிலும் மிகவும் விரும்பப்படும் சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமாக அது தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளது. Fems ஆனது, Fems Aya எனும் உயர்தர, குறைந்த விலையிலான ஆரோக்கிய நப்கின்களை சந்தைக்கு கொண்டு வந்த இலங்கையின் முதலாவது ஆரோக்கிய நப்கின் வர்த்தகநாமமாகும். அதன் 18 வருடங்களுக்கும் மேலான பயணத்தில், பல்வேறு சமூக ஆதரவு முயற்சிகள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கான அதன் முன்னோடியான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், மாதவிடாய் ஏழ்மை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்பபடுத்துவதற்கும் அதனை எதிர்த்துப் போராடுவதற்குமான ஒரு தேசிய முயற்சியை அது 2021 ஆம் ஆண்டில் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Recent Comments