75ஆவது சுதந்திரத்தை கொண்டாடும் இலங்கையர் அனைவருக்கும் ‘பேச்சு சுதந்திரம்’ மூலம் HUTCH நிவாரணம்
இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான தனது பிரசன்னத்தை கொண்டாடியுள்ள முன்னணி கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பாடல் நிறுவனமான HUTCH, தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக மிகவும் விசேடமான அழைப்புப் பொதியை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டு மக்களின் பக்கம் தொடர்ந்தும் இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
புதிய பொதியானது Hutch 072/078 வலையமைப்பிற்குள் ரூ. 67 இற்கு, எல்லையற்ற இலவச அழைப்புகளை ஒரு மாதத்திற்கு வழங்குகிறது. இப்பொதியானது, 2 மாதங்களுக்கு ரூ. 123 இற்கும், 3 மாதங்களுக்கு ரூ. 147 இற்கும் கிடைக்கின்றது. இந்த எல்லையற்ற அழைப்பு பொதிகளானது, அனைத்து மக்களின் ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் முயற்சியில் மக்களின் அத்தியாவசிய தகவல் தொடர்பாடல் செலவுகளில் உறுதியான சேமிப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த பொதிகள் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு ஆகிய இரு சேவைகளிலும் கிடைக்கின்றன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா, “இக்காலப்பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார நெருக்கடியை நாம் நன்கு புரிந்துகொண்டுள்ளோம். இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இருப்பை பேணி மக்களுக்கு எப்போதும் கட்டுப்படியான விலையில் கையடக்கத் தொலைபேசி சேவைகளை வழங்கி வரும் ஒரு நிறுவனம் எனும் வகையில், மக்களுக்கு உதவுவதற்கான எமது முயற்சிகளை மேலும் வலுப்படுத்தி வருகிறோம். கையடக்கத் தொலைபேசி சேவைகளின் கட்டணங்களைக் குறைப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டிற்குத் அவசியமான ஏனைய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சேமிப்பை பெற முடியுமாக இருக்கும்.” என்றார்.
Fortune Global 500 இனது கூட்டு நிறுவனமான CK Hutchison Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமான HUTCH ஸ்ரீலங்கா, டிஜிட்டல் மாற்றத்தின் முக்கிய கட்டத்தை நிறைவு செய்துள்ளதன் மூலம், தற்போது சிறந்த வலையமைப்பு விஸ்தரிப்பு மற்றும் தரமான அழைப்பு மற்றும் டேட்டா அனுபவத்தை வழங்கும் நாட்டின் மிகப்பெரிய 4G கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகளில் ஒன்றாக செயற்பட்டு வருகின்றது.
END
Recent Comments