PropertyGuru ஆசிய ரியல் எஸ்டேட் உச்சிமாநாடு 2022: பொறுப்புமிக்க புத்தாக்கம் மற்றும் இசைவாக்க மீள் புத்தாக்க கண்டுபிடிப்புக்கு அழைப்பு விடுக்கிறது

Seriously experienced event photography by www.SNAPP.media
  • நிலைபேறான தன்மை மற்றும் பன்முகத்தன்மை சம்பியன்கள் தலைமையிலான உள்ளீர்ப்பு மற்றும் ஸ்மார்ட் தீர்வுகள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் கலந்துரையாடல்கள்
  • ARES இனை அறிமுகப்படுத்தும் PropertyGuru குழுமத்தின் நிறுவனங்களுக்கான தீர்வுகள், வணிகத்திற்கான PropertyGuru

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சொத்து தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru Group (NYSE: PGRU), அதன் சிந்தனைத் தலைமைத்துவ தளமான PropertyGuru Asia Real Estate Summit (ARES) இனை நேரடியாக இணையும் நிலைக்கு கொண்டு வந்துள்ளதோடு, உலகெங்கிலும் உள்ள மிகவும் புத்திசாலித்தனமான எண்ணம் கொண்டோரை ஈர்க்கிறது.

2020 மற்றும் 2021 இல் வெற்றிகரமான மெய்நிகர் உச்சிமாநாடு நிழ்வுகளைத் தொடர்ந்து, Thailand Convention and Exhibition Bureau  (TCEB) மற்றும் PropertyGuru for Business ஆகியவற்றின் ஆதரவுடன் PropertyGuru Asia Real Estate Summit உச்சிமாநாட்டின் 2022 ஆம் ஆண்டுக்கான பதிப்பு, ‘Adaptive Reinvention’ (இசைவாக்க மீள் கண்டுபிடிப்பு) எனும் கருப்பொருளைக் கொண்டுள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்நுட்பத் துறைகளானவை, கொவிட் தொற்றுநோய் சகாப்தத்தில் இருந்து விடுபட்டு, காலநிலை நிலைமைகளுடன் தொடர்ந்து இயங்கி வருவதால், அவை தொடர்ந்தும் முன்னேறி பயணிக்கும் பாதையில் உள்ளன.

ARES 2022 மாநாடு கடந்த 2022 டிசம்பர் 08 ஆம் திகதி இடம்பெற்றது. இது PropertyGuru குழுமம் நிறுவப்பட்டு 15 வருடங்கள் நிறைவடைவதை அடையாளப்படுத்துகிறது. உச்சிமாநாட்டின் 2022 பதிப்புடன் இணைந்தவாறு அதன் நிறுவன ரீதியான வர்த்தகநாமமான ProeprtyGuru for Business ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

PropertyGuru குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியும் அதன் நிர்வாக பணிப்பாளருமான ஹரி V. கிருஷ்ணன் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இன்று, PropertyGuru தனது 15 வருட கால செயல்பாடுகளை கொண்டாடுகிறது. மேலும் இவ்வேளையில், நாம் எமது நிறுவன தீர்வுகள் வர்த்தகநாமமான ‘PropertyGuru For Business’ இனை சொத்து டெவலப்பர்கள், முகவர்கள், வங்கிகள், மதிப்பீட்டாளர்கள், நகர திட்டவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் போன்ற வாடிக்கையாளர்களை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்துகிறோம். ரியல் எஸ்டேட் பயணத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதும், வீடுகளை தேடுபவர்கள் மற்றும் எமது வணிகக் கூட்டாளர்களுக்கான நம்பிக்கைத் தளத்தை உருவாக்குவதும் எமது இலட்சியமாகும். எமது தனியுரிம தரவு, தொழில்நுட்பம் மற்றும் நபர்களின் ஒருங்கிணைந்த ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம், சிறந்த தகவலறிந்த முடிவுகளை எடுக்க எமது வணிக கூட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நாம் அதிகாரமளிக்க விரும்புகிறோம்.” என்றார்.

PropertyGuru குழுமத்தின் சந்தைகளுக்கான நிர்வாக பணிப்பாளர் ஜெரிமி வில்லியம்ஸ் கருத்து வெளியிடுகையில், “8ஆது வருடமாக, PropertyGuru Asia Real Estate Summit உச்சி மாநாடு, உலகம் முழுவதும் உள்ள பிரகாசமான எண்ணங்களைக் கொண்டவர்களை ஒன்று சேர்த்துள்ளது. இந்த 8 வருடங்களில், கல்வி, புத்தாக்கம் மற்றும் கருத்துக்களைப் பகிர்வதில் ஊக்கம், புத்தாக்கங்களை ஊக்குவித்தல், எமது கட்டமைக்கப்பட்ட சூழல்களை மேம்படுத்த உதவும் நடைமுறை தீர்வுகளை உருவாக்குதல் ஆகியன, PropertyGuru Asia Real Estate Summit உச்சிமாநாட்டில் எமது இலக்காகும்.” என்றார்.

8ஆவது PropertyGuru Asia Real Estate Summit உச்சிமாநாட்டின் கருப்பொருள் பின்வரும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: மீள்தொடக்கம்/மீளிணைவு; புத்துயிர்/மீள் ஆரம்பம்; மீள்பரிசீலனை/மீளமைப்பு; மீள்கற்பனை/மீள்கண்டுபிடிப்பு

Quantum Thailand Ltd நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும், துபாயின் Burj Khalifa முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினருமான Stephen Oehme இனது நகர்ப்புற மாற்றம் குறித்த நடவடிக்கைக்கான அழைப்புடன் இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் பிரிவில், ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றத் திட்டத்தில் (UN-Habitat) நகர முதலீட்டு வசதிக்கான திட்ட முகாமையாளரான Erastus Njuke Ndugire இன் நிலைபேறான தன்மை குறித்த முக்கிய உரையும், Economist Intelligence Unit ஆசிய ஆய்வாளர், Syetarn Hansakul இன் ஆசியாவின் தற்போதைய நுண் பொருளாதாரம் பற்றிய முக்கிய உரையும் இதில் உள்ளடங்கியிருந்தது.

உச்சிமாநாட்டின் 2ஆவது பிரிவு, International Finance Corporation (IFC)/உலக வங்கிக் குழுமத்தின் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளருமான Kim-See Lim, சொத்து வணிகங்களில் நிதியளிப்பு கருவிகள் மற்றும் காலநிலை முதலீடுகள் பற்றிய முக்கிய உரையை உள்ளடக்கியிருந்தது. Liter of Light Foundation இன் நிறுவுனர் மற்றும் 2020 இல் PropertyGuru’s Visionary of the year விருதை வென்ற Illac Diaz இன் மனிதாபிமான தொழில்நுட்பத்தின் முக்கிய உரையையும் இது உள்ளடக்கியிருந்தது. தொழில்நுட்ப தொழில்முனைவோர் Dustin Jefferson Onghangseng, 2021 PropertyGuru Tech Innovation விருதை வென்ற comprehensive air sensor uHoo இன் விளக்கக் காட்சியையும் வழங்கியிருந்தார்.

இதன் மூன்றாவது பிரிவானது, தரவு வழிகாட்டல் நிலைபேறான கட்டுப்படியான வீட்டுத் தீர்வுகள் குழு (REHDA Institute இணைந்து வழங்கியது) பற்றிய கலந்துரையாடலுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் PropertyGuru குழுமத்தின் ரியல் எஸ்டேட் நுண்ணறிவுத் தலைவர் Dr. Nai Jia Lee மற்றும் Our Hong Kong Foundation யின் ஆராய்ச்சி பணிப்பாளரும் நிலம் மற்றும் வீட்டுத் தலைவருமான Ryan Ip, CFA, MRICS மற்றும் REHDA இன் நம்பிக்கையாளரும் MKH Berhad இன் குழும நிர்வாக பணிப்பாளருமான Tan Sri Datuk Eddy Chen Lok Loi வழிகாட்டலுடன் இடம்பெற்ற, கொவிட் தொற்றுக்கு பிந்தைய ஸ்மார்ட் டெவலப்மெண்ட் உத்திகள் எனும் விவாதத்திற்கு சர்வதேச ஒலிபரப்பாளர் Manisha Tank தலைமை தாங்கினார்.  இதில் HLB Mann Judd இன் பங்குதாரரும் tax தலைவரும் அவுஸ்திரேலியாவின் சொத்து நிதிகள் சங்கத்தின் குழு உறுப்பினரும் பொருளாளருமான Josh Chye; SPARK Architects கட்டடக் கலைஞர்களின் நிறுவன பங்குதாரரும் பணிப்பாளருமான Stephen Pimbley; PropertyGuru குழுமத்தின் விசேட திட்டங்களின் பணிப்பாளர் Winston Lee; Perunding ZAB Sdn Bhd இன் நிர்வாக பணிப்பாளர் Ir. Dr. Zulhkiple A. Bakar ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றினர்.

Copenhagen இனை தளமாகக் கொண்ட கட்டடக்கலை ஸ்டுடியோ ஆனது, புத்தாக்கமான, திறந்த மற்றும் நிலைபேறான இடங்களை உருவாக்க, நீருடன் இயங்கும் MAST இன் ஆரம்ப நிறுவன பங்குதாரரான Marshall Blecher இன் வடிவமைப்பு தொடர்பான முக்கிய உரையுடன் மூன்றாவது பிரிவானது தொடர்ந்தது. Variety மீடியா ஆய்வாளரும் நிருபருமான Heidi Chung இனால் நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு குழு விவாதத்தில், ஆசியாவிலுள்ள டெவலப்பர்கள், முதலீட்டாளர்கள், நுகர்வோர் மத்தியில் நிலைபேறானதன்மை, முதலாவது மனநிலையை வலியுறுத்தும் முன்னணி குரல்களான, Sena Development Public Company Limited நிறுவனத்தின் Dr. Kessara Thanyalakpark நிர்வாக பணிப்பாளர்; APAC West கூட்டாண்மை வளர்ச்சியின் பிராந்திய தலைவர், IWG Kristin Thorsteins; International Financial Corporation/உலக வங்கி குழுவின் ஆசிய-பசிபிக் தலைவரான Rachanee Chanawatr; Stephen Oehme; வியட்நாமின் GroupGSA பொது பணிப்பாளர் Thien Duong ஆகியோர் பங்குபற்றினர்.

APAC, HLB இன் பிரதம பிராந்திய அதிகாரி Coco Liu; ESCA Incorporated நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி Jean Jacquelyn de Castro; Asiana குழுமத்தின் தலைமை பணிப்பாளர் Loemongga Haoemasan; PropertyGuru Group இன் தரவு மற்றும் மென்பொருள் தீர்வுகளின் நிர்வாக பணிப்பாளர் Shyn Yee Ho-Strangas ஆகிய பலம் வாய்ந்த பெண் தலைவர்களின் கலந்துரையாடலுடன் இந்த பிரிவு நிறைவடைந்தது.

ARES 2022 இன் இறுதிப் பிரிவானது, சொத்து தேடுபவர்களுக்கு புதிய ஊடக விளைவுகளைப் பற்றி விவாதிக்க, இன்றைய மிகவும் செல்வாக்கு மிக்க உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் ஆளுமைகளை ஒன்றிணைத்தது.

இறுதிப் பிரிவானது, சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும் புத்தகாக் கண்டுபிடிப்பாளர்களுக்கு மரியாதைகளை வழங்குவதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. நிராகரிக்கப்பட்ட கழிவுகளை பயனுள்ள கட்டுமானப் பொருட்களாக மாற்றும் இந்தோனேசிய நிறுவனமான Rebricks இற்கு, சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் புத்தாக்கங்களைக் கொண்ட தொடக்க நிறுவனங்கள் மற்றும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கான (SME) சிறந்த அடையாளமான PropertyGuru Tech Innovation விருது வழங்கப்பட்டது. PropertyGuru Asia Property Awards & Events இன் பொது முகாமையாளர் Jules Kay, Rebricks இன் நிறுவுனர்களான Novita Tan மற்றும் Ovy Sabrina ஆகியோர், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற செங்கற்களுக்கான கழிவுகளின் பயணம் குறித்த சூடான விவாதத்தை மேற்கொண்டனர்.

PropertyGuru Hackathon 2022: Selling Sunsets, சந்தை நுண்ணறிவு மற்றும் பிரச்சாரக் கருவியின் வெற்றியாளருக்கு டெவலப்பர் சாய்ஸ் விருதை வழங்குவதற்காக, PropertyGuru குழுமத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரியான Manav Kamboj வருகை தந்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய உரையையும் அவர் வழங்கியிருந்தார்.

2022 ஆம் ஆண்டிற்கான Visionary of the Year விருது, Never Too Small எனும் பிரபலமான இணையத் தொடரின் நிறுவுனர் Colin Chee இற்கு வழங்கப்பட்டது. அவரது தனித்துவமான, கதை சொல்லும் திறன் மற்றும் அவரது சிறிய-தடம் கொண்ட குடியிருப்பு கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பில் ஆர்வம் ஆகியன, உலகளாவிய இயக்கத்தை ஊக்கப்படுத்தியுள்ளன. மீள்பயன்பாட்டு கட்டமைப்புகள் பற்றிய ஒரு ஆய்வையும் Colin Chee வழங்கினார்.

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு, AsiaRealEstateSummit.com இனைப் பார்வையிடவும் அல்லது [email protected] இற்கு மின்னஞ்சல் செய்யவும்.

ENDS

Image Caption

PropertyGuru குழுமத்தின் Marketplaces நிர்வாக பணிப்பாளர் ஜெரிமி வில்லியம்ஸ் வரவேற்புரை நிகழ்த்திய போது…

Share

You may also like...