புதிதாக பெற்றோராக மாறியவர்களுக்கு குழந்தை வளர்ப்பு விழிப்புணர்வு மற்றும் போசாக்கு உணவுகள் வழங்கிய பேபி செரமி

  • நாட்டின் தற்போதைய சவால்களுக்கு மத்தியில் மாத்தறை மாவட்டத்தில் நிகழ்வுகள்
    இலங்கையின் முன்னணி மற்றும் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான Baby Cheramy, கடந்த 2022 ஓகஸ்ட் 15 – 19 வரை மாத்தறை மாவட்டத்தில் அதன் பெற்றோர் கிளினிக் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது. கொட்டபொல, ஊருபொக்க, மொரவக்க, ககெனதுர, வெலிகம, வெலிபிட்டிய, ஹக்மன, கிரிந்த உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கியதாக இது இடம்பெற்றது. இந்த பெற்றோர் கிளினிக்குகள் குழந்தை பராமரிப்பு, ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு மேம்பாடு மற்றும் இணைந்த பெற்றோர் வளர்ப்பு ஆகியவற்றில் பெற்றோருக்கு அறிவூட்டுகின்றன. தற்போதைய சவால்களுக்கு மத்தியில் குழந்தைகளின் உடல், மன, நடத்தை ரீதியான வளர்ச்சிக்கான சிறந்த ஊட்டச்சத்தை உறுதி செய்வதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய பயனுள்ள அறிவும் இதன்போது வழங்கப்பட்டது.
    பெற்றோர் கிளினிக்கின் நிறைவில், தாய்மார்களுக்கு பெறுமதியான பேபி செரமி பரிசுப் பொதி, சீலிடப்பட்ட போசாக்கான காலை உணவுப் பொதி, பசும் பால் பொதிகளுடன் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கர்ப்பம் மற்றும் குழந்தை பராமரிப்பு தொடர்பான நூல் ஆகியன பரிசாக வழங்கப்பட்டன. தாய் சேய் பராமரிப்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட நிபுணர் வளக் குழுவினால், மாத்தறை பெற்றோர் கிளினிக்கில் இது தொடர்பான விளக்கங்கள் இடம்பெற்றன. குழந்தை பராமரிப்பு மற்றும் ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு மேம்பாடு குறித்து, தாய் சேய் நல ஆலோசகர் ஷியாமலி பத்திரகே விளக்கமளித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் இசைப் பணிப்பாளர் ஜகத் வட்டவல மற்றும் எல்பிட்டிய வலயக் கல்வி அலுவலகத்தின் அழகியல் கற்பித்தல் பயிற்றுவிப்பாளர் ஸ்வர்ணா வட்டவல ஆகியோரால் இசை தெரபி அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு மேம்பாட்டு அதிகாரசபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒரு சில அமர்வுகளில், சுகாதா மருத்துவ அதிகாரி பணிமனை (MOH) மருத்துவர்கள் பெற்றோர் முன்னிலையில் உரையாற்றினர். இதன் நிறைவில், பங்கேற்பாளர்களிடமிருந்து பெறுமதியான கருத்துகள் அடங்கிய படிவங்களும் சேகரிக்கப்பட்டன.
    ‘தருபெட்டியாட்ட சுரக்ஷித லோகயக்’ (குழந்தை செல்வத்திற்கு பாதுகாப்பான உலகம்) எனும் எனும் கருப்பொருளின் கீழ், தாய் மற்றும் தந்தையர் இருவரையும் உள்ளடக்கிய பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மேல், தென், கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாக நாடு முழுவதும் இதுபோன்ற 30 நிகழ்ச்சிகளை நடத்துவதை பேபி செரமி நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய இதன் முதல் நிகழ்ச்சி தங்கொட்டுவையில் இடம்பெற்றது. தங்கொட்டுவை வைத்தியசாலையின் சிறுவர் வார்டுக்கு பேபி செரமி தனது தயாரிப்புகளைக் கொண்ட அலுமாரியை நன்கொடையாக வழங்கியது. இந்த அலுமாரியில் தாய்மார்கள் மற்றும் தாய்மார்களாக ஆகவுள்ளவர்கள் தங்கள் வசதிக்கேற்ப பேபி செரமி தயாரிப்புகளை உபயோகிக்க அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதோடு, அதிலுள்ள பொருட்கள் மீள் நிரப்பப்படும்.
    இலங்கை தாய்மார்களின் நம்பிக்கையை வென்று, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமாக மாறியதன் 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய இவ்வேளையில், பேபி செரமி இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தும். பேபி செரமியின் தயாரிப்புகள் மற்றும் குழந்தை வளர்ப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, www.babycheramy.lk இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது https://www.facebook.com/BabyCheramy/ மூலம் அதன் Facebook பக்கத்தைப் பார்வையிடவும்.
    END

Photo Caption:
2022 ஓகஸ்ட் 15 – 19 வரை மாத்தறை மாவட்டத்தில் பெற்றோர் கிளினிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர் மற்றும் பெற்றோராக ஆகவுள்ளவர்களின் ஒரு பகுதியினர்.

Share

You may also like...