மகளிர் நட்பு பணியிட விருதுகளில் சிறந்த பெண் நட்பு பணியிடமாக DIMO தெரிவு AICPA & CIMA Satyn Women Friendly Workplace Awards 2022
பல்துறை சார்ந்த முன்னணி நிறுவனமான DIMO, சமீபத்தில் இடம்பெற்ற AICPA & CIMA Satyn Women Friendly Workplace Awards 2022 (பெண்கள் நட்பு பணியிட விருதுகள்) விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் மிகச் சிறந்த பெண் நட்பு பணியிடங்களில் ஒன்றாக அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதன்போது ‘மிக பெண் நட்பு மிக்க புத்தாக்கம்/ நடைமுறைகள் கொண்ட இலங்கை நிறுவனம்’ எனும் விருதும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இது நிறுவனத்தின், பெண் நட்பு கலாசாரத்தை வளர்த்து வரும் அசைக்க முடியாத முயற்சிக்கான கௌவரமாகும்.
பாரம்பரியமாக ஆண்களை மையப்படுத்தியதாக அறியப்படும் பல்வேறு தொழில்துறைகளுக்கு மத்தியில் வலுவான பாரம்பரியத்துடன், DIMO தனது குழுவில் உள்ள பெண்களுக்கான ஆற்றல்மிக்க பணியிட கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. DIMO நிறுவனம் ஆனது, அதன் அனைத்து பணியிடங்களிலும் சம வாய்ப்புகள் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொடர்ந்தும் முன்னுரிமை அளித்து வருகிறது. வாகன பழுதுபார்ப்பு மற்றும் பொறியியல் போன்ற வேலைகளிலும் பெண்களின் பங்கேற்பை மேம்படுத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அத்துடன், STEM துறைகளிலும் பெண்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதில் நிறுவனம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.
இந்த கௌரவமான சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த, DIMO நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, “AICPA & CIMA Satyn மகளிர் நட்பு பணியிட விருதுகள் 2022 விழாவில் நாம் அடைந்துள்ள இந்த வெற்றியானது, எமது ஊழியர்களான DIMO குழுவின் பெண்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதில், DIMO மிக அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை காட்டுகிறது. சமீப காலங்களில், DIMO நிறுவனத்தில் தலைமைப் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கையில் 5.8% அதிகரிப்பையும், வழக்கத்திற்கு மாறான பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை 15% அதிகரிப்பையும், பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது 4% அதிகரிப்பையும் நாம் காண்கிறோம்.” என்றார்.
சமத்துவம், தகுதி, மரியாதைக்குரிய பணியிட நடத்தைகள் ஆகிய விடயங்களில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ‘பணியாளர் வள குழு’ (Employee Resource Group – ERG) யினை நிறுவனம் நிறுவியுள்ளது. இது ஊழியர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, தங்களுக்கு உள்ள எந்தவொரு பிரச்சினையையும் பற்றி பேசுவதற்கு ஒரு இடத்தை வழங்குகிறது. ERG ஆனது, பல்வேறு முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தளமாகும். DIMO நிறுவனத்தில் உள்ள எமது சொந்த பெண் பொறியியலாளர்கள் மூலம் சந்தையில் திறமையாளர்களை தேடுவதன் மூலம் பெண் பொறியியலாளர்களை உருவாக்குதல் மற்றும் Unconscious Bias (மறைமுக சார்பு சிந்தனை) தொடர்பில் நிறுவன அளவில் சமீபத்தில் நடத்தப்பட்ட மாற்றத்திற்கான பயிற்சிகள் ஆகியன, நிறுவனத்தில் பெண் நட்பு கலாசாரத்தை உருவாக்க DIMO நிறுவனம் அறிமுகப்படுத்திய சில புத்தாக்கமான விடயங்களாகும்.
IFC, DFAT (International Finance Corporation, Australian Department of Foreign Affairs & Trade) SheWorks Sri Lanka Partnership மற்றும் UNGC Working Group பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை உள்ளிட்ட மூலோபாய பங்குதாரர் கூட்டாண்மை மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் ஆகியன, சபை மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ நிலைகள் முதல் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் தலைமைத்துவத்தை வழங்கி, பெண்களுக்கான பெருநிறுவன இலக்குகளை அடைய நிறுவனத்திற்கு உதவியுள்ளன. அந்த வகையில், இவ்வருடத்தின் ஆரம்பத்தில், DIMO அதன் பணிப்பாளர் சபையின் முதல் பெண் உறுப்பினரான திருமதி தில்ருக்ஷி குருகுலசூரியவை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
DIMO தனது பணியிடங்களில், தான் சேவை வழங்கும் சமூகங்களைச் சேர்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று உறுதியாக நம்புகிறது. தனது பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலமும், மட்டிட முடியாத அளவிலான வெற்றியை அடையும் வகையில் அவர்களுக்கு தொடர்ச்சியாக அதிகாரம் அளிப்பதன் மூலமும், நிறுவனம் தொடர்ந்து முன்னேறி, அதன் அறிவாற்றலை வலுப்படுத்தி, படைப்பாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பதில் வளர்ந்து வருகிறது. தற்போது அடைந்துள்ள இந்த முக்கிய சாதனையானது, இந்த நம்பிக்கையையே சுட்டிக்காட்டுவதுடன், அதிகாரமளித்தல் மூலம் சமத்துவத்தை முன்னெடுத்தல் எனும் அடிப்படையில் DIMO அதன் முற்போக்கான தன்மையை அடையாளப்படுத்துகிறது.
End
Image Caption
இலங்கையின் சிறந்த பெண் நட்பு பணியிடங்களில் ஒன்று, எனும் விருதை DIMO நிறுவனத்தின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்ட போது…
Recent Comments