ISO 45001:2018 சான்றிதழை பெற்றுள்ள DIMO

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO சமீபத்தில் ISO 45001:2018 சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த சான்றிதழானது, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் உயர் தரத்தை உறுதிப்படுத்தியுள்ள DIMO நிறுவனத்தின் திறனை மேலும் உறுதிப்படுத்துவதோடு, அதற்கான அங்கீகாரமாகவும் விளங்குகிறது.

DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வர்த்தகத்தின் மிகவும் பெறுமதியான சொத்தாகிய எமது பணியாளர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதே எமது முதன்மையான நோக்கமாகும். தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதியை (Occupational Health & Safety Management System – OHSMS) செயற்படுத்துவது தொடர்பான எமது நிறுவனத்தின் மூலோபாய முடிவானது, பணியில் இருக்கும் எமது ஊழியர்களின் உடல் நலன் மற்றும் மன நலனை தொடர்ந்து மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டதாகும். இது எமது ஊழியர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்கிறது. நிறுவனம் தனது ஊழியர்கள் உள்ளிட்ட, தாம் சேவை செய்யும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதற்கு DIMO உறுதிபூண்டுள்ளது. இது ஒப்பிட முடியாத செயல்திறனுக்கு வழியேற்பபடுத்துகிறது. இந்தச் சான்றிதழானது, பணியாளர்கள் எப்பொழுதும் சிறப்பாக கவனிக்கப்படுவதை உறுதிசெய்வது தொடர்பான எமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.” என்றார்.

ISO 45001:2018 சான்றிதழ் அங்கீகாரமானது, DIMO நிறுவனம் எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான அபாயங்கள் மற்றும் அனர்த்தங்களை அடையாளம் காண உதவுவதோடு, அந்த அபாயங்கள் நிகழும் வாய்ப்புகளை நீக்கவும் உதவுகிறது. மேலும், அந்த அபாயங்கள் மற்றும் செயற்பாட்டு அபாயங்களின் சாத்தியமான விளைவுகள் மற்றும் தாக்கத்தை உயர்ந்த அளவில் குறைக்க நிறுவனத்திற்கு திறனை ஏற்படுத்துகிறது. இந்தச் சான்றிதழைப் பெறுவது, துறையில் முன்னணியில் இருக்கும் DIMO இன் சிறப்பை மேலும் உயர்த்துவதோடு, DIMO மீது வாடிக்கையாளர் நம்பிக்கையை மேலும் உருவாக்குகிறது.

DIMO நிறுவனத்தின் தர முகாமைத்துவ தொகுதியானது, 2001 முதல் ISO சான்றிதழைப் பெற்றுள்ளதுடன், தற்போது ISO 9001:2015 சான்றிதழையும் அது பெற்றுள்ளது. சூழல் முகாமைத்துவ தொகுதியானது முதன் முதலில் 2005 இல் ISO சான்றிதழை பெற்றது. தற்போது அது ISO 14001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது. OHSMS ஆனது 2021 இல் செயற்படுத்தப்பட்டதோடு, DIMO நிறுவனத்தின் பெறுமதியான ஊழியர்களுக்கு அது சிறந்த பணிச்சூழலையும் உறுதி செய்கிறது.

END

Share

You may also like...