சிறந்த சேவையை வழங்குவதற்காக S-lon தனது யாழ்ப்பாண மீள் விநியோக மையத்தை இடமாற்றம் செய்துள்ளது

தெர்மோபிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் இணைப்புகள் துறையில் சந்தையில் முன்னணியில் உள்ள S-lon Lanka தனியார் நிறுவனம், தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் சேவையின் தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடனும், தங்களது விற்பனை பங்குதாரர்களுக்கு உதவும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது மீள் விநியோக மையத்தை (re-distribution centre) ஒரு புதிய இடத்திற்கு மாற்றம் செய்துள்ளது.

இப்புதிய மீள் விநியோக மையமானது, S-lon Lanka நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது, குறிப்பாக இந்த சவாலான காலங்களில், உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் அது தனது வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர் வலையமைப்பிற்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்தியுள்ளது. S-lon நிறுவனத்தின் விநியோகஸ்தர் வலையமைப்பானது அதன் வணிக நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகின்றது. அத்துடன் விற்பனையாளர்களை ஆதரிப்பதில் நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளரும் அதன் பிரதான செயற்பாட்டு அதிகாரியுமான எஸ்.சி. வீரசேகர அவர்கள், இப்புதிய மீள் விநியோக நிலையம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “எமது நெறிமுறைகளின் அடிப்படையில், நாம் எமது வாடிக்கையாளர்களை எமது குடும்ப உறுப்பினர்களாக கருதுகிறோம். ஏனெனில் எமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் எமது தயாரிப்புகள் கொள்வனவு செய்யப்படும் வரை நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு பொருளையும் விற்பனை செய்வதில்லை. சந்தையில் முன்னணியிலுள்ள நிறுவனம் எனும் வகையில் நாம் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகிறோம். குறிப்பாக இந்த கடினமான காலங்களில் சிறந்த சேவையை வழங்குவது இன்றியமையாததாக காணப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ள எமது மீள் விநியோக நிலையத்தை மிகவும் வசதியான மற்றும் விசாலமான இடத்தில் நாம் இடமாற்றம் செய்துள்ளோம். இதன் மூலம் எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை எமது விற்பனையாளர்கள் இலகுவாக பெறுவதை நாம் உறுதி செய்துள்ளோம்.” என்றார்.

புதிய மீள் விநியோக நிலையத்தின் திறப்பு விழாவில், கெபிட்டல் மஹாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளரும் அதன் பிரதான செயற்பாட்டு அதிகாரியுமான எஸ்.சி. வீரசேகர அவர்கள் மற்றும் யாழ் மீள் விநியோக நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிருபாகரன் அவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் S-lon நிறுவனத்தின் பிரதிநிதிகளான, நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி பணிப்பாளர் ஜயந்த கால்லஹேவா, சந்தைப்படுத்தல் முகாமையாளர் நுவன் விக்ரமபத்திரண, விற்பனை முகாமையாளர் சனத் சமிந்த தலைமையிலான கள விற்பனைக் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

END

Share

You may also like...