பயிற்சி உபகரணங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள DIMO வின் தொழிற்கல்விப் பிரிவு DATS

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO, அதன் தொழிற்கல்விப் பிரிவான DIMO Academy for Technical Skills (DATS) மூலம் பயிற்சி உபகரணங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது.

இது GIZ இன் நிதியுதவியுடன் கிளிநொச்சியில் உள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்திற்கான (Sri Lanka German Training Institute in Kilinochchi – SLGTI) திட்டத்தை சமீபத்தில் நிறைவு செய்தது. ஹைப்ரிட் மற்றும் தொடர்ச்சியான மாறக்கூடிய ட்ரான்ஸ்மிஷன் (CVT) உள்ளிட்ட பல்வேறு வகையான gearboxes இனது cutaway மொடல்களை வழங்குவதை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது. இது வாகனங்கள் (automobile) தொடர்பான கற்கைகளை வழங்குவதுடன், வேலை செய்யும் வாகன காலநிலை கட்டுப்பாடு (Working automobile climate control) மற்றும் பெற்றோல் எரிபொருள் ஊசி சிமுலேட்டர்கள் (gasoline fuel injection simulators) மற்றும் ஒரு விசேட டேபிள்டாப் வீல் சீரமைப்பு அளவுரு சிமுலேட்டரும் (special tabletop wheel alignment parameter simulator) இந்த திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப தரவு, பயனர் கையேடுகள், செயற்பாட்டு பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டன.

வாகன (automobile) பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்சி உபகரணங்களுக்கு மேலதிகமாக, கட்டட சேவைகள் துறைக்கான பயிற்சி உபகரணங்களையும் DATS வழங்குகிறது.

பயிற்சி மாதிரிகள் மற்றும் சிமுலேட்டர்கள் என DATS இலங்கையில் பயிற்சி உபகரண உற்பத்தி துறையில் நுழைந்தது, அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய வகையாகும். இவை மிகவும் விலை உயர்ந்ததாகும் என்பதுடன், தொழில் பயிற்சி வகுப்புகளில் பிரயோக ரீதியான அமர்வுகளை மட்டுப்படுத்துகிறது. இங்கு மலிவான தெரிவுகள் உள்ளன என்றாலும், தரம் மற்றும் நிறைவுத் தன்மை உலகளாவிய தரத்திற்கு இணையாக இல்லை. எனவே, நிபுணத்துவம் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்திற்கான அணுகலுடன் DATS, தற்போது உள்ளூர் நிறுவனங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி தீர்வுகளை வழங்குகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் தொழிற்கல்வி பயிற்சித் (Vocational Education Training – VET) துறையில் முன்னணியில் உள்ள DATS, சமீபத்திய தொழில்துறை மேம்பாடுகள் மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையாக தனது சொந்த பயிற்சி வசதிகளை மேம்படுத்துவதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளது. German Dual VET இன் வழங்குநரான DATS, எப்போதும் ஜேர்மன் கைவினைத்திறனின் உயர் தரங்களுக்குள் வாழ்கிறது.

DIMO நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “தொழில்சார் கல்வி என்பது நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். நாம் சேவை வழங்கும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பது தொடர்பான எமது முயற்சிகளில் இது ஒரு முக்கிய படி என்பதுடன், DIMO வின் நிலைபேறானதன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியுமாகும்.” என்றார்.

நாட்டினதும், இளைஞர்களுக்காகவும் நீண்ட கால நோக்கத்துடன் VET கல்வியகங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளுக்கு உயர் தரமான, மிகவும் தனிப்பயனாக்கக்கூடிய பயிற்சிகளை வழங்கும் நிறுவனமாகத் தொடர்ந்தும் தன்னை மேம்படுத்த DATS நிறுவனம் எதிர்பார்ப்பதோடு, இறக்குமதி செய்யப்படுபவற்றுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடும்படியாக குறைந்த செலவுடையதாகும்.

பல ஆண்டுகளாக, தொழிற்கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு தலைப்புகளில் பலவிதமான வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பயிற்சித் திட்டங்களை DATS வழங்கியுள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் வகையில், DATS ஆனது சமீபத்தில் SLGTI இற்காக இரண்டாவது முறையாக ஒரு நிகழ்ச்சியை நடாத்தியிருந்ததுடன், மொரட்டுவையில் உள்ள சிலோன்-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்திற்காக (Ceylon-German Technical Training Institute – CGTTI) முதன் முறையாக மற்றொரு நிகழ்ச்சியை நடாத்தியிருந்தது. பயிற்சித் திட்டங்களில் புதிய கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் கருவிகளுடன் சமீபத்திய வாகனங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தில் பயிற்றுவிப்பாளர்களுக்கு புத்தம் புதிய தகவல்களை வழங்குவது உள்ளிட்டவை அடங்குகின்றன. தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு, டீசல் எஞ்சின் முகாமைத்துவம், பெற்றோல் எஞ்சின் முகாமைத்துவம், தன்னியக்க பரிமாற்றம், சஸ்பென்ஷன் சிஸ்டம்ஸ் மற்றும் வாயுச் சீராக்கல் தொகுதிகள் உள்ளிட்ட தொழில்நுட்பப் பகுதிகள் (Occupational Health & Safety, Diesel Engine Management, Petrol Engine Management, Automatic Transmission, Suspension Systems, Air Conditioning systems) உள்ளடக்கப்பட்டுள்ளன. DIMO வின் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரியின் ஆதரவுடன், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயிற்றுனர்களால் பயிற்சி அமர்வுகளை DATS வினால் நடாத்தப்பட்டன. மதிப்புமிக்க உள்ளூர் மாணவர்களுக்கு சர்வதேச தரத்தை உறுதி செய்வதற்காக, சமீபத்திய மேம்பாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் DATS பயிற்சி பாடத்திட்டத்தை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.

உள்ளூர் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்க, திறன் கொண்டவர்களை உருவாக்க, நாட்டின் மக்கள்தொகையில் கணிசமான பகுதியினரிடையே பாரிய ஆற்றல் உள்ளது. அது மாத்திரமன்றி, அந்நியச் செலாவணியை பெறும் பொருட்டு, திறனான பணியாளர்களை ஏற்றுமதி செய்யும் திறன் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள DATS, வாகனத் துறையில் உலகத் தரம் வாய்ந்த தொழிற்பயிற்சியை வழங்கும் நோக்கில், Daimler AG ஜேர்மனியுடன் இணைந்து 1990 இல் நிறுவப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில், இலங்கையில் ஜேர்மன் சான்றளிக்கப்பட்ட தொழிற்கல்வித் தகுதிகளை வழங்குவதற்காக இலங்கையில் ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுடன் DATS கூட்டுச் சேர்ந்துள்ளது. DATS ஏனைய துறைகளிலும் தகுதிகளை வழங்குவதன் மூலம் அதன் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது. அதன் சமீபத்திய மேலதிக இணைப்பாக, Diploma in Plant Engineering for Sanitary Heating and Air Conditioning பொறியியல் டிப்ளோமாவை (PESHA) வழங்குகின்றது. இது “வெளிநாட்டு ஜேர்மன் இரட்டை தொழிற்பயிற்சி” (A வகை தகுதி) என Nuremberg Chamber of Commerce and Industry (IHK) மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

END

Image Captions:

பயிற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் DIMO, GIZ, SLGTI, CGTTI ஆகியவற்றின் பிரதிநிதிகள்.
. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிற்கல்வி இன்றியமையாதது
Share

You may also like...