Huawei ICT போட்டி 2021-2022: உலகளாவிய இறுதிப் போட்டியில் 130 சர்வதேச அணிகளுக்கு வெற்றி

Huawei ICT போட்டி 2021-2022 கடந்த ஜூன் 25ஆம் திகதி சீனாவின் ஷென்சென் நகரில் நிறைவடைந்தது. ஆறாவது முறையாக இந்த ஆண்டு இடம்பெற்ற Huawei ICT போட்டியானது, பயிற்சி, புத்தாக்கம், தொழில்துறை ஆகிய மூன்று பிரிவுகளில் இடம்பெற்றது. இதில் உலகளாவிய ரீதியில் 85 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 2,000 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150,000 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். அந்தந்த நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் போட்டிகளில் வெற்றி பெற்ற தேசிய மற்றும் பிராந்திய போட்டிகளின் மூலம் வெற்றிபெற்ற 43 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 130 அணிகள் உலகளாவிய இறுதிப் போட்டியில் பங்குபற்றின. அந்த வகையில் இது வரை இடம்பெற்ற போட்டிகளில் இதுவே மிகப் பெரியதாகும். இவ்வருட பங்கேற்பாளர்கள் இம்முறை அறிமுகமான, பெண்கள் தொழில்நுட்ப தொடரில் முதன்முறையாக போட்டியிட்டிருந்தார்கள். இளம் பெண் போட்டியாளர்களால் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த திறமைகளை கௌரவிக்கும் வகையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது. Huawei இன் TECH4ALL டிஜிட்டல் உள்ளடக்க திட்டத்தின் ஒரு பகுதியாக, இவ்விருது வழங்கும் விழாவின் போது TECH4ALL டிஜிட்டல் உள்ளடக்க விருதும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகள் மிக பரபரப்பாக இடம்பெற்றதுடன், பயிற்சிப் போட்டியின் வலையமைப்பு தடத்தில் (Network Track) மாபெரும் பரிசை பின்வரும் ஏழு அணிகள் வென்றன. Wuhan Technical College of Communications Team, Chongqing College of Electronic Engineering Team, Nigeria Team 2, Yangtze Normal University Team, Jiangxi University of Software Professional Technology Team, Egypt Team, Nigeria Team 1. பயிற்சிப் போட்டியின் கிளவுட் தடத்திற்கான (Cloud Track) மாபெரும் பரிசை Algeria Team, Malaysia Team 1, Brazil Team, Guangzhou College of Commerce Team ஆகிய நான்கு அணிகள் பெற்றுக் கொண்டன. Beijing Jiaotong University Team, Xiamen University Team, Salahaddin University Team ஆகிய மூன்று அணிகளும் புத்தாக்க போட்டிக்கான (Innovation Competition) மாபெரும் பரிசை பெற்றன. இறுதியாக, தொழில்துறை போட்டிக்கான (Industry Competition) மாபெரும் பரிசை Southeast University யின் Futuristic Inspection Team வென்றது.

Huawei ICT போட்டியானது, கொவிட் தொற்று பரவலுக்கு மத்தியிலும், முன்னெப்போதையும் விட இவ்வருடம் மிக அதிக பங்கேற்பாளர்களை கொண்டிருந்தது. திறமையாளர்களின் கூட்டணிகளை நிறுவுதல், திறமையாளர்களின் தரங்களை ஒருங்கிணைத்தல், திறமையாளர்களின் திறன்களை மேம்படுத்துதல், திறமையாளர்களன் மதிப்பை வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் கல்வி, தொழில்துறை, பொதுமக்கள் திறமைகள் தொகுதியை தொடர்ச்சியாக உருவாக்குவதற்கு Huawei எதிர்காலத்தில், திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த சமூகத்தினதும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்காக, 2024 ஆம் ஆண்டுக்குள் சான்றளிக்கப்பட்ட ஒரு மில்லியன் ICT நிபுணர்களை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களையும் Huawei அறிவித்துள்ளது. இது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம், தொழில்துறை வளர்ச்சி, நிலைபேறான சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டுள்ளது.

END

Share

You may also like...