மிக ஸ்மார்ட்டான எதிர்காலத்திற்கான ஸ்மார்ட்போன்களின் பரிணாமம்

2022ஆம் ஆண்டில் உலக ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை 6.56 பில்லியனை கடந்துள்ளதுடன், இது உலக சனத்தொகையில் 83.7% இற்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதற்கு வழிவகுத்துள்ளது. தொலைபேசிகள் எமது வாழ்க்கை முறையை வியக்கத்தக்க வழிகளில் முற்றிலும் மாற்றியுள்ளன. உறுதியான இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வலைப்பின்னலை உருவாக்குவதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் நுகர்வோரின் அன்றாட வாழ்க்கையை தடையின்றி ஒத்திசைவாக பேணுகின்றன.

ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம் ஒரு பார்வை

தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்புதல் ஆகிய ஒரே நோக்கத்தை பூர்த்தி செய்வதற்கான வசதிகளைக் கொண்ட feature போன்களுடன் ஆரம்பமான பயணமானது, எல்லையற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தும் திறன்மிக்க மிக உறுதியான இணைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன்களின் தொகுதிகளை உருவாக்கும் பயணத்தை வந்தடைந்துள்ளது. உங்கள் அன்றாட செயற்பாடுகளை நிர்வகிப்பது தொடக்கம் உங்கள் வாழ்க்கை முறை தெரிவுகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட அனைத்தையும், எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் புதிய சகாப்தத்தை நோக்கி ஸ்மார்ட்போன்கள் வழி திறந்துள்ளன. டிஜிட்டல் புரட்சியானது, AI, ML, 5G, IoT போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் தற்போதைய ஸ்மார்ட்போன்களை எதிர்காலத்தை காண்பிக்கும் ஆதாரமாக மாற்றியமைத்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சகாப்தமானது, LCD, OLED, AMOLED திரைகள், Augmented Reality (AR) எனப்படும் மாய உலகை அடைவதனை எளிதாக்குதல், தங்கு தடையற்ற குரல் வழி கட்டுப்பாடு உள்ளிட்ட பல நினைத்துப் பார்க்க முடியாத அம்சங்களைக் கொண்டுள்ளது.

முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமங்களில் ஒன்றான vivo, தனக்கென ‘தொழில்துறையில்-முதன்முறையாக’ (‘industry-firsts’) என்பதை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கண்டுபிடிப்புகளின் வரலாற்றை ஏற்படுத்தியுள்ளது. பிரத்தியேகமான Hi-Fi தரத்திலான ஓடியோ சிப்பை ஸ்மார்ட்போனில் முதன்முதலில் வைத்தமை உள்ளிட்ட, உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட்போனின் சாதனையை முறியடிப்பது வரை, vivo ஆனது தொழில்நுட்பத்தில் புதிய அனுபவங்களைப் பின்தொடர்ந்து செல்வதில் உறுதியாக உள்ளது. ஒரு சமயத்தில், ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்பு அம்சமாக கொண்டிருந்த, பின்புறத்தில் அமைக்கப்பட்ட கைரேகை ஸ்கேனரை, திரையில் உள்ளமைந்த In-Display கைரேகை உணரும் தொழில்நுட்பத்தை வழங்கியதில் vivo முன்னோடியாக இருந்தது. இவ்வம்சமானது, பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை விட்டுக் கொடுக்காமல் வெளியில் தெரியும் கைரேகை உணரி பகுதியை நீக்கி, பயனர் விருப்ப வடிவமைப்பை உருவாக்க வழி வகுத்தது.  vivo ஆனது தனிப்பயனாக்கப்பட்ட chip V1+ இனை உருவாக்கியுள்ளது. இது புகைப்படவியல் மற்றும் வீடியோ செயலிகளுக்காக முழுமையாக தனிப்பயனாக்கப்பட்ட integrated circuit (ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று) உடனான சிப்பைக் கொண்டுள்ளது. இது துல்லியமான நவீன காட்சித் தரத்தை வழங்குகின்றது. இது நிறுவனத்தின் தனிச் சுதந்திரமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) மற்றும் சிப் வடிவமைப்பில் vivo வின் ஆரம்பகட்ட திருப்புமுனையாக அமைந்ததன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகின்றது.

தொழில்நுட்பங்களை உறுதிப்படுத்துவதன் மூலம் புகைப்படக் கலைஞர்களை ஊக்குவித்தல்

கெமரா தொழில்நுட்பத்தில் அசைவதனால் ஏற்படும் நடுக்கத்தை குறைக்கும் Stabilization அம்சமானது, எதிர்கால ஸ்மார்ட்போன் முன்பக்க கெமராக்களுக்கான தரநிலையை தீர்மானிப்பதில் ஒரு படிநிலையைக் குறிக்கிறது. OIS ஆனது,  மென்பொருள்-வன்பொருள் ஒத்திசைவை உருவாக்குகிறது. இது கைகளில் தொலைபேசி அசைவில் உள்ள நிலையிலும், இயங்கிக் கொண்டிருக்கும் பொருள் ஒன்றின் காட்சிகளை எடுக்கும் போதும், உறுதியான காட்சி நிலைப்படுத்துதல் திறன்களை வழங்குகிறது. OIS என்பது ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும். இது கையடக்கத் தொலைபேசியின் இயக்கத்தைக் கண்டறிந்து, புகைப்படத் தரத்தை மேம்படுத்துவதற்காக கெமராவை தன்னியக்க முறையில் சரிசெய்து, பயனர்களுக்கு சிறந்த முழுமையான புகைப்பட அனுபவத்தை வழங்குகிறது.

அதேபோன்று, Eye Autofocus அம்சத்தை தனது சாதனங்களில் இணைப்பதன் மூலம் மங்கலான புகைப்படங்களுக்கான தீர்வையும் vivo கண்டுபிடித்துள்ளது. இந்த அம்சம் மிகவும் உள்ளார்ந்த புகைப்பட (frame details) விபரங்களை புத்திசாலித்தனமாகப் கைப்பற்றுவதுடன், இயங்கும் பொருட்களின் புகைப்படத்தை எடுக்கும் வேளையில் கூட, அத்தருணங்களைத் தடையின்றி படம்பிடிக்க, கெமரா குவியத்தை (போகஸை) உரிய வகையில் பேணுகின்றது. இந்த உயர் தொழில்நுட்ப முன்னேற்றத்தை தங்களது ஸ்மார்ட்போன்களில் கொண்டு வந்துள்ளதன் மூலம் vivo அதன் கெமரா பரிணாமத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

5G அலையின் வருகை

சமூக இடைவெளி மற்றும் தொலைதூரத்திலிருந்து பணிகளை மேற்கொள்கின்ற எதிர்வுகூறமுடியாத சகாப்தத்தில், இலங்கை அதன் டிஜிட்டல் புரட்சியை செயற்படுத்தி வருகிறது. பெரும்பாலான சேவை வழங்குனர்கள், 5G இனால் இயக்கப்படும் இணையற்ற அதிவேக இணைப்பு மற்றும் குறைந்தபட்ச தாமத அலைகளை வழங்க தயாராக உள்ளன. தெற்காசியாவில் உள்ள நாடுகளில் 5G தொழில்நுட்பத்தில் சோதனைகளை மேற்கொள்வதில், இலங்கை முதலாவது நாடாக உள்ளதுடன், இயங்கும் 5G வலையமைப்பைக் கொண்டிருப்பதன் மூலம் பாரிய முன்னேற்றத்தையும் இலங்கை கண்டுள்ளது. பல்வேறு சர்வதேச கேபிள்களுடன் இணைக்கப்பட்ட தேசிய ஃபைபர் வலையமைப்புடன் இலங்கை தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இந்த 45,000 கிலோமீற்றர் வலையமைப்பானது, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவதுடன், இது 5G தொழில்நுட்பம் உள்ளிட்ட நிலையான புரோட்பேண்ட் மற்றும் கையடக்க தொலைபேசி சேவைகளுக்கு முதுகெலும்பாக செயல்படுகின்றது. பிராந்தியத்தில் 5G தொழில்நுட்பமானது, அடிப்படையான செயன்முறைகளை மாற்றுவதுடன் தொழில்துறைகள் மற்றும் வணிகங்களை மறுவடிவமைக்க உதவும். இந்த தொழில்நுட்பத்தின் தோற்றமானது, பயனர்கள் மின்னல் வேகத்தையும் மிகவும் குறைந்த தாமத நிலையையும் அனுபவிக்க வழி வகுக்கும்.

Share

You may also like...