தனது TATA வாடிக்கையாளர்களுக்கு புதுமையான காப்புறுதித் திட்டத்தை வழங்க Allianz உடன் இணைந்த DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, உலகின் மிகப்பெரிய காப்புறுதி மற்றும் நிதிச் சேவை வழங்குனர்களில் ஒன்றான Allianz உடன் இணைந்து, DIMO வின் TATA வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன மோட்டார் வாகன காப்புறுதி மற்றும் இழப்பீட்டு தீர்வுத் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது.

உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 5 வருடங்களுக்குள் TATA வாகனங்களுக்கு, விபத்தின் போதான பழுதுபார்த்தலின் போது ஏற்படும் செலவைக் குறைக்க, உரிமையாளர் செலுத்த வேண்டிய பகுதிக்கு விலக்களிப்பதன் மூலம்  வாடிக்கையாளர்களுக்கு உதவுவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. இந்த புத்தாக்கமான வசதியானது, DIMO வின் அனைத்து TATA வாடிக்கையாளர்களுக்கும், காப்புறுதியை புதுப்பிக்கும் வேளையில், விசேட சலுகை காப்புறுதி ப்ரீமியம் கட்டணங்களை வழங்குகிறது. விபத்தின் போது அருகிலுள்ள DIMO-TATA பழுதுபார்க்கும் மையம் வரை வாகனத்தை இழுத்துச் செல்வது முதல் DIMO மற்றும் Allianz ஆகிய இரு நிறுவனங்களும் தங்களது அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைந்து செயற்படுவதோடு, விரைவான மற்றும் திறனான மதிப்பீடு மற்றும் அங்கீகரித்தல் செயன்முறை, உரிய உற்பத்தியாளரின் பரிந்துரைகளின்படி வாகனத்தை பழுதுபார்த்தல், வாகனத்தை அதன் அசல் நிலையில் வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பதற்காக பழுதுபார்ப்புக்கான கட்டண பட்டியல்களை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, DIMO வின் TATA வாடிக்கையாளர்கள் எவ்வித அலைச்சலும் இன்றி மிக இலகுவான முறையில் பெற முடியும்.

DIMO நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த பங்காளித்துவமானது எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்குவதற்கு எமக்கு மேலும் உதவும். ஒரு நிறுவனம் எனும் வகையில் DIMO எப்போதும் அது சேவை செய்யும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு உந்துதல் அளிக்கிறது. மேலும் இது போன்ற ஒரு நேரத்தில், Allianz உடன் இணைந்து புத்தாக்கமான காப்புறுதித் திட்டத்தை வழங்குவது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

Allianz Insurance Lanka Ltd நிறுவனத்தின் பிரதான் நிறைவேற்று அதிகாரி கனி சுப்ரமணியம் தெரிவிக்கையில், “DIMO உடன் இணைந்து வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தயாரிப்பை வழங்குவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஒரு வாகனம் பழுதுபார்க்கப்படுவதையும், உச்ச அளவில் சிரமமின்றி மீள்கட்டமைக்கப்படுவதையும் நாம் உறுதி செய்கிறோம். அதிநவீன தொழில்நுட்பம், சிறந்த பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள், மிக உயர்ந்த தரமான உபகரணங்களுடன் விபத்துகளின் போதான பழுதுபார்த்தலில் முழுமையான தீர்வை வழங்குவது தொடர்பிலான அங்கீகாரத்தை DIMO கொண்டுள்ளது. DIMO வாடிக்கையாளர்களுக்கு எமது ஈடு இணையற்ற மோட்டார் வாகன காப்புறுதி நன்மைகள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதானது, தற்போது இந்த விசேட பொதியின் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டு, ஒரு கடினமற்ற அனுபவத்தை உறுதி செய்கிறது.” என்றார்.

TATA வாகனங்களின் இலங்கையின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக உள்ள DIMO நிறுவனம், உள்ளூர் வாடிக்கையாளர்களின் பல்வேறு போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்றவாறான முழு அளவிலான TATA வர்த்தக வாகனங்களையும் வழங்குகிறது. இவை யாவும், DIMO வின் இணையற்ற விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு மற்றும் 8 தசாப்தங்களுக்கு மேலான நம்பிக்கை மூலம் வலுவூட்டப்படுகிறது. அசல் TATA உதிரிப்பாகங்கள், விசேட கருவிகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி மிகத் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவால், உற்பத்தியாளரின் வழிகாட்டல்களின்படி அனைத்து பழுதுபார்ப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பழுதுபார்த்தல் அல்லது சேவைக்குப் பின்னரும் TATA வாகனங்கள் உகந்த நிலையிலும் செயற்றிறனுடனும் வாடிக்கையாளர்களுக்கு மீள கையளிக்கப்படுமென DIMO உத்தரவாதம் வழங்குகிறது.

TATA வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் தனித்துவமான 24 மணிநேர வீதி வழி உதவிச் சேவைக்கு மேலதிகமாக, DIMO நாடு முழுவதும் 16 கிளைகள் மற்றும் 500 இற்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் வசதியானதும் திறமையானதுமான சேவையை உறுதிப்படுத்துகிறது.

Allianz குழுமமானது, 70 இற்கும் அதிக நாடுகளில் 126 மில்லியன் தனிப்பட்ட மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகின் முன்னணி காப்புறுதி வழங்குனரும், சொத்து முகாமையாளர்களில் ஒருவருமாகும். சொத்து, ஆயுள், மருத்துவ காப்புறுதி முதல் உதவிச் சேவைகள், கடன் காப்புறுதி, உலகளாவிய வணிகக் காப்புறுதி வரையிலான பரந்த அளவிலான தனிப்பட்ட மற்றும் பெருநிறுவன ரீதியான காப்புறுதிச் சேவைகளின் மூலம் Allianz வாடிக்கையாளர்கள் பயனடைகிறார்கள். Allianz ஆனது, உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். அதன் காப்புறுதி வாடிக்கையாளர்கள் சார்பாக சுமார் 809 பில்லியன் யூரோக்களை அது நிர்வகிக்கிறது. அது மாத்திரமன்றி நிறுவனத்தின் சொத்து முகாமையாளர்களான PIMCO மற்றும் Allianz Global Investors (Allianz GI) ஆகியன 1.9 ட்ரில்லியன் யூரோக்களுக்கு அதிகமான பெறுமதி கொண்ட மூன்றாம் தரப்பு சொத்துகளை நிர்வகிக்கின்றன. Allianz Insurance Lanka Ltd. மற்றும் Allianz Life Insurance Lanka Ltd. ஆகியன ஒன்று சேர்த்து Allianz Lanka என அழைக்கப்படுகின்றது. இவை அனைத்தும் ஜேர்மனியின் Munich நகரை தலைமையகமாகக் கொண்ட, காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிகத்தில் முதன்மையான சேவைகளைக் வழங்கும் உலகளாவிய நிதிச் சேவை வழங்குநரான Allianz SE இற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனங்களாகும். Allianz குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் உறுதியான மூலதனமயமாக்கல் ஆகியன, உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவு ஆகியவற்றுடன் இணைந்து, Allianz Lanka வின் வெற்றிக்கான சக்திவாய்ந்த சூத்திரத்தை உருவாக்கிறது.

Share

You may also like...