SLIM நிறுவனமானது  இலங்கையர்களின் தாங்குதிறனை பாராட்டுவதோடு , அதற்கு ஆதரவு  அளிக்கும் வகையில் கட்டணங்களை அதிகரிக்காது என அறிவிக்கிறது

இலங்கையில் சந்தைப்படுத்தல் தொழில்துறையாளர்களை மேம்படுத்த அதிகாரமளிக்கப்பட்டுள்ள நிறுவனமான, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM), நாடு கடந்து வரும் தற்போதைய சிரமங்களை தைரியமாக எதிர்கொள்ளும் அனைத்து இலங்கையர்களுடனும் அனுதாபம் கொள்கிறது.

இலங்கையின் வரலாற்றில் இது உண்மையில் ஒரு சவாலான கால கட்டமாக இருந்த போதிலும், நாட்டு மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதோடு, அவற்றை சில வேளைகளில் கைவிடும் நிலையை எதிர்கொண்டுள்ளனர், அவர்கள் தனித்தனியாகவோ, குடும்பங்களாக கூட்டாகவோ இத்தகைய தியாகங்களைச் செய்த போதிலும், இந்த மாற்றத்தின் காலப்பகுதியில் பலர் நெகிழ்வான போக்கில் ஈடுபடுவதையும் SLIM அவதானிக்கிறது.

தற்போது உள்ளுர் சந்தையில் விநியோகிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை அதிகரிப்பதற்குப் பதிலாக, பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக இயன்றளவு அவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டம் இதுவென SLIM நம்புகிறது.

இந்த புரிதலுடன், இலங்கை சந்தை முழுவதும் கடுமையான விலை உயர்வுகளுக்கு மத்தியில், வாழ்வில் உள்ள தடைகளை கடப்பதற்கும், நமது தேசத்தின் வளர்ச்சியில் பங்குதாரர் ஆவதற்கும் கல்வியே சிறந்த ஆயுதம் என்ற உறுதியான நம்பிக்கையுடன், SLIM அதன் அனைத்து சேவைகளின் கட்டணங்களையும் குறிப்பாக, பல்வேறு பாட நெறிகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களையும் மாற்றமின்றி, தற்போது அறவிடப்படுவதைப் போன்றே தொடர்ந்தும் அறவிட, ஏகமனதாக முடிவு செய்துள்ளது. (செலவு அதிகரிப்பு காரணமான விகித அதிகரிப்பு தவிர்க்க முடியாததாகும்)

Share

You may also like...