இலங்கையில் Hikvision இற்கான தேசிய விநியோகஸ்தரான IT Gallery, ‘Hikvision Partner Summit 2022’ யினை நடாத்தியுள்ளது
வீடியோ கண்காணிப்பு பொருட்கள் மற்றும் தீர்வுகளின் முன்னணி விநியோகஸ்தரும் இலங்கையில் Hikvision இற்கான தேசிய விநியோகஸ்தருமான IT Gallery, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி பங்குபற்றுதலுடன் பௌதீக ரீதியாக “Hikvision Partner Summit 2022” நிகழ்வை சமீபத்தில் நடாத்தியிருந்தது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அதன் நாடளாவிய பங்காளிகளின் செயல்திறனை அங்கீகரிப்பதற்காக, Hikvision இன் 300 இற்கும் அதிக பங்காளிகளின் பங்குபற்றலுடன் இம்மாநாடு இடம்பெற்றது.
இந்நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்த, IT Gallery Computers Private Limited யின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா, “Hikvision இலங்கையிலும் உலகெங்கிலும் உலகின் மிகப்பெரிய வீடியோ கண்காணிப்பு தீர்வுகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் எனும் வகையில், ஒரு உறுதியான நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளதென நாம் நம்புகிறோம். இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு சேவை தொடர்பான சந்தையில் உள்ள சிறந்த நிலைமைகளைப் பற்றி எமது கூட்டாளர்களுக்கு அறிவிப்பதும், அது தொடர்பில் தெளிவூட்டுவதும், முக்கியம் என்பதன் அடிப்படையில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது இடம்பெற்ற கருத்து பகிர்வின் போது, இத்தொழில்துறையானது வெறுமனே பாதுகாப்பை மாத்திரம் கருத்தில் கொள்வதிலிருந்து எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை உள்ளடக்கியதாக அமைந்தது. சமூகங்கள், நிறுவனங்கள் ஆகிய அனைத்து பிரிவினருக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் நிலைபேறான தன்மையின் புதிய நிலைகளை கொண்டுவரும் அதே நேரத்தில், பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் தொடர்பில் பரந்த அளவிலான செயல்பாடுகளை கொண்டதாக இது அமைந்திருந்தது.” என்றார்.
பாதுகாப்பு சேவையில் அதிக பிரபலமடைந்து வரும் விடயமான செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பிலும் இம்மாநாட்டில் அதிகளவில் தெளிவூட்டப்பட்டது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் AI இன் பெறுமதியை உணர்ந்துள்ளதோடு, தன்னியக்க வாகன இலக்கத்தகடு அடையாளம் காணுதல் (ANPR), இயக்கங்கள் தொடர்பான தன்னியக்க முன்னறிவித்தல்கள், தவறான எச்சரிக்கை மணி பிழைகளின் குறைப்பு போன்ற பல்வேறு விடயங்களில், AI பயன்பாடுகளுக்கான புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி, காட்சி திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட, இணையம் தொடர்பான பொருட்களில் (IoT) பாதுகாப்புத் துறையானது உலகின் ஒரு முக்கிய அங்கமாகியுள்ளது. AIoT ஆனது ஆற்றல், பொருட்கள் போக்குவரத்து சேவை, உற்பத்தி, சில்லறை விற்பனை, கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு தொழில்துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கி, வியாபித்துள்ளது.
இந்நிகழ்வானது, பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கு மேலதிகமாக, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், சாதனைகளைப் புரிந்த, நாடு முழுவதிலும் உள்ள IT Gallery யின் கூட்டாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கான ஒரு தருணமாகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒருங்கிணைந்த தொகுதிகளானவை, தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாடுகளில் உள்ள பிரச்சினைளுக்கு (data silos) தீர்வாக அறியப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சேவைத் துறைகளில் உள்ள தனிநபர்களுக்கு ஏற்படும் தடையான “data silos” களில் இருந்து விடுபட அந்தந்த துறையில் உள்ளவர்கள் ஆர்வமாக உள்ளனர். பல்வேறு தகவல்-தொகுதிகளின் ஒருங்கிணைப்பானது, இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க போதுமான, ஒரு பயனுள்ள அணுகுமுறை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
கிளவுட் அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் சேவைகளானவை, சிறிய வணிகச் சந்தைகள் முதல் பாரிய நிறுவன மட்டங்கள் வரை அவசியமாகி வருகின்றன. காரணம், இந்த வேகமானது அரச மற்றும் தனியார் கிளவுட்கள் மூலம், கிளவுட் அடிப்படையிலான பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதனை, பெருமளவான வணிகங்களை தூண்டுகின்றன. cloud-hosting உட்கட்டமைப்பானது, local server அல்லது மென்பொருளுக்கான தேவையை நீக்குகிறது. இதில், பயனர்கள் தங்கள் சொத்துகள் மற்றும் வணிகங்களின் நிலையை நிகழ் நேரத்தில் நேரடியாக எளிதாக பார்க்கலாம் என்பதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அலாரங்களை விரைவாகப் பெறலாம். அத்துடன் கையடக்க தொலைபேசி செயலியைப் பயன்படுத்தி அவசரகால பதில் வழங்கலை மேற்கொள்ளலாம். கிளவுட் ஆனது, பாதுகாப்பு வணிக செயற்பாட்டாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது சாதனங்களின் செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளவும், பிழைகளை சரிசெய்யவும், பாதுகாப்பு தொகுதிகளை பராமரிக்கவும் அதனை மேம்படுத்தவும், அனைத்தையும் தொலைநிலையிலிருந்து செயற்படுத்தும் அமைப்பின் மூலம், சிறந்த பெறுமதி சேர் சேவைகளை வழங்கவும் உதவுகிறது.
எவ்வாறான வானிலையிலும், எவ்வேளையிலும் 24 மணி நேரமும், படத் தெளிவு மற்றும் துல்லியமான விபரங்களைப் படம்பிடிப்பதானது, வீடியோ பாதுகாப்பு கெமராக்களுக்கு எப்போதும் இன்றியமையாத அம்சங்களாகும். மோசமான காட்சி வெளிப்படுத்தலில், தெளிவான வீடியோ பாதுகாப்பு புகைப்படவியலுக்காக, குறிப்பாக கடுமையான வானிலை நிலைகளின் போது, உயர் செயற்றிறன் கொண்ட புகைப்படவியல் சென்சர்கள், ISP தொழில்நுட்பம் மற்றும் AI algorithms அம்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக கெமராக்கள் தெளிவான விபரங்களை வெளிப்படுத்துவது உறுதிப்படுத்தப்படுகிறது. புதிய கெமராக்களில் பல லென்ஸ்களை இணைப்பதற்கான நிலைமை மற்றும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், போக்குவரத்து நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், அரங்கங்கள், சதுக்கங்கள் போன்றவற்றிலான பயன்பாடுகளுக்கு, இந்த மல்டி-லென்ஸ் கெமராக்கள் ஒவ்வொரு மட்டத்திலும் பலனளிக்கும் என்பதை உச்சிமாநாடு விபரித்தது. கைரேகை அங்கீகாரம் முதல் முகம் மற்றும் கருவிழி பாதுகாப்பு உறுதிப்படுத்தல் வரையான உயிரியல் ரீதியான பாதுகாப்பு அம்சங்கள் மூலமான கட்டுப்பாடானது, சந்தையை மிக விரைவாக ஆக்கிரமிக்கிறது. கைரேகை போன்ற உயிரியல் ரீதியான அணுகல் கட்டுப்பாடுகளானவை, அதிக பாதுகாப்பு மற்றும் குறைந்த ஏமாற்றத்தை தரக் கூடிய செயல்திறன் போன்ற அத்தியாவசிய நன்மைகளைக் கொண்டு வருகின்றன.
Zero Trust (பூச்சிய நம்பிக்கை) அணுகுமுறையானது, இக்கலந்துரையாடலின் ஒரு சுவாரஸ்யமான பகுதியாக இருந்தது. இது இணைய பாதுகாப்பு தொடர்பான கவனத்தையும் ஈர்த்தது. இது ஒரு நிறுவனத்தின் வலையமைப்புக் கட்டமைப்பிலிருந்து நம்பிக்கை எனும் எண்ணக்கருவை நீக்குவதன் மூலம் தரவு மீறல்களைத் தடுக்க உருவாக்கப்பட்ட ஒரு மூலோபாய முன்முயற்சியாகும். Zero Trust ஆனது, “ஒருபோதும் நம்பாதே, எப்போதும் சரிபார்” எனும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பசுமையான உலகத்தை அடிப்படையாகக் கொண்டு, அதிகரித்து வரும் பாதுகாப்பு தொழில்துறை உற்பத்தியாளர்கள், குறைந்த காபன் வெளிப்படுத்தல் மற்றும் பசுமையான உற்பத்தி தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். இவ்விடயம் இவ்வருடத்தில் பாரிய முன்னேற்றங்களைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி நிறுவனங்களுக்கான காபன் வெளியேற்ற தரநிலைகளை கட்டுப்படுத்தும் உள்ளூர் சட்டங்கள், ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் கொள்கைகளை இம்மாநாடு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததுடன், இது தொழிற்சாலைகளை அவற்றின் அன்றாட செயற்பாடுகள் மற்றும் உற்பத்தியில், சூழல் தொடர்பில் அதிக அக்கறையான நடைமுறைகளை பின்பற்றுவதை நோக்கி செலுத்துகிறது.
IT Gallery ஆனது, இலங்கையில் ICT தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் உலகளவில் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களின் பெறுமதி சேர் விநியோகஸ்தர்களில் முன்னணியில் உள்ளது. இது 2011 முதல் IT விநியோக சந்தையில் உள்ளதுடன், கடந்த 5 முதல் 6 வருடங்களாக, கண்காணிப்பு சந்தையில் அதன் கூட்டாளர்களுக்கு ஆதரவளிக்கும் பெறுமதி சேர் விநியோகஸ்தராக முக்கிய பங்கு வகித்துள்ளது. கொவிட் தொற்று காலப்பகுதி முழுவதும், IT Gallery ஆனது, ஒரு பொறுப்பான பெருநிறுவனம் எனும் அடிப்படையில், அதன் கூட்டாளர்களுக்கு பொருட்கள் மற்றும் கடன் அடிப்படையில் உதவிகளை செய்து, அதன் நற்பெயரை நிலைநிறுத்தியுள்ளது.
End.
Recent Comments