கேரகல ரஜ மகா விகாரையை தொடர்ந்தும் 8ஆவது ஆண்டாக ஒளிரச் செய்யும் சுதேசி கொஹொம்ப

மூலிகைகள் கொண்ட தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தியாளரும், சந்தையிலும் முன்னணியில் உள்ள சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி. ஆனது, அதன் சமூக ஆதரவு முயற்சிகளில் ஒன்றின் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க கேரகல ரஜ மகா விகாரையின் ‘ஆலோக பூஜாவ’ ஒளியூட்டும் நிகழ்வுக்கு அண்மையில் அனுசரணை வழங்கியிருந்தது. சுதேசி நிறுவனத்தின் தலைவி திருமதி அமாரி விஜேவர்தனவின் எண்ணக்கருவிற்கு அமைய, 8ஆவது வருடமாக, துருது பௌர்ணமி தினத்தில் ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காராய’ நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள கேரகல ரஜ மகா விகாரை 13ஆம் நூற்றாண்டில் தம்பதெனிய இராச்சியத்தில் விஜயபாகு மன்னரின் ஆட்சியின்போது நிர்மாணிக்ப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் கேரகல ரஜ மகா விகாரையில் “பத்மாவதி பிரிவெனா” நிறுவப்பட்டது.

சுதேசி நிறுவனத்தின் தலைவி திருமதி அமாரி விஜேவர்தன இந்த ஆலோக பூஜை நிகழ்வு குறித்து கருத்து வெளியிடுகையில், “ சுதேசி நிறுவனம், பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை நிலைநிறுத்தும் ஒரு இலங்கை நிறுவனம் எனும் வகையில், வருடாந்த ஆலோக பூஜை போன்ற விடயங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை கடமையாக கருதுகிறது. ஒரு சமூகப் பொறுப்புள்ள நிறுவனமாக, இந்த முயற்சிகளுக்கு எமது முழு ஆதரவையும் வழங்க நாம் உறுதிபூண்டுள்ளோம். இதன்மூலம் எதிர்கால தலைமுறைகள் பின்பற்றுவதற்கு சரியான முன்மாதிரியொன்றை நாம் உருவாக்குகிறோம்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதேசியினால் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றமையானது, அனைத்து வழிபாட்டாளர்களின் நலனுக்காக மாத்திரமன்றி நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்டுவதற்குமாகும்.” என்றார்.

சுதேசி தலைவி திருமதி அமாரி விஜேவர்தன நாடு முழுவதிலும் உள்ள மத ஸ்தலங்களுக்கும் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தம்பதெனிய ரஜமஹா விகாரையின் ‘ஸ்ரீ தலதா மாளிகை’ மற்றும் பழங்கால சுவரோவியங்கள் திருமதி அமாரி விஜேவர்தனவினால் புனரமைக்கப்பட்டன. 1927 இல் களனி ரஜ மகா விகாரையின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்த ஹெலனா விஜேவர்தன லமாதெனியின் கொள்ளுப் பேத்தியே திருமதி அமாரி விஜேவர்தன  ஆவார்.

கதிர்காம கிரி வெஹெர, ருஹுணு கதிர்காம மஹா தேவாலயம், சபரகமு மஹா சமன் தேவாலயம், தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயம், அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மகா தேவாலயம், கண்டி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவாலயம், ரெதிகம ரிதி விகாரை, லங்காதிலக ரஜ மஹா விகாரை, அம்மதுவ குடா கதரகம தேவலாயம், தெரணியகல சமன் தேவாலயம், தம்பதெனிய ரஜா மகா விகாரை, ஆகியவற்றின் வருடாந்த ஆலோக பூஜைகளுக்கும், சுதேசி பங்களிப்பு செய்து வருகின்றது.

100% உள்ளூர் நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. சுதேசி கொஹொம்ப ஆனது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. மத தலங்கள் மற்றும் புகையிரத நிலையங்களுக்கு கை கழுவும் தொகுதிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள், கொவிட்-19 தொற்று சூழ்நிலையில் சிறுவர்களை இலக்காகக் கொண்ட வீடியோ மூலமான கை கழுவுதல் படிமுறைகள், ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தலை சத்காரய’ வேப்பிலை மர நடுகை பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தொட்டிகளை நன்கொடை செய்தல், கொஹொம்ப பேபி பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுதேசி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு முயற்சிகளாக குறிப்பிடலாம்.

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடி மற்றும் சந்தையின் முன்னணி நிறுவனமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பெர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம் கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகிய வகைகள் உள்ளடங்குகின்றன. நிறுவனம் சிறந்த மூலிகை வர்த்தகநாமமான கொஹொம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு வர்த்தகநாமமான ராணி சந்தனம் ஆகியவற்றை தயாரித்து சந்தைப்படுத்துகிறது.

“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகள் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், சுதேசி அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறது. நாங்கள் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையானது. அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளின் கொடுமைகளிலிருந்து விலக்கற்றவை. ராணி சந்தனம் உள்ளிட்ட சுதேசி தயாரிப்புகள் யாவும் இங்கிலாந்தின் Vegetarian Society, UK யினது அங்கீகாரம் பெற்றவை.” இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் அவற்றிற்கு முன்னுரிமையளிக்கின்றது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேஷி, அண்மையில், எந்தவொரு நிறுவனமும் பெறாத COVID-19 பாதுகாப்பு முகாமைத்துவ சான்றிதழை பெற்றதுடன், இவ்வாறான தொழில்துறையில் முதன்முதலாக தனது பெயரில் பெற்ற பல்வேறு உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.

கிருமிகளுக்கு எதிராக இயற்கையான பாதுகாப்பை வழங்கும் வேம்பின் நன்மையால் செறிவூட்டப்பட்ட ‘சுவதேஷி கொஹொம்ப ஹெர்பல் ஹேண்ட் வொஷ்’ ஆனது, சுதேசி கொஹொம்ப உற்றத்திகளின் ஒரு புதிய சேர்த்தலாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சுதேசி கொஹொம்ப ஹேர்பல் ஹேண்ட் வொஷ் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. சுதேசி கொஹொம்ப ஹேர்பல் ஹேண்ட் வொஷ் – கொஹொம்ப வித் லெமன்கிராஸ் மற்றும் அலோவேரா, ஸ்வதேஷி கொஹொம்ப ஹேர்பல் ஹேண்ட் வாஷ் – வேம்பு, மஞ்சள், கற்றாளை கொண்டது.

Photo Caption

திருமதி அமாரி விஜேவர்தன – சுதேசி நிறுவனத்தின் தலைவி, கேரகல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய ரஜவெல நந்தரத்தன தேரர் மற்றும் சுதேசி அதிகாரிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கேரகல ரஜ மஹா விகாரையை ஒளியூட்டும் நடவடிக்கையில்

Share

You may also like...