vivo டோக்கியோ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒரு பார்வை
ultra wide-angle கெமரா, telephoto கெமரா, TOF கெமரா போன்ற அதிநவீன புகைப்படவியல் தொழில்நுட்பங்கள் என வரும்போது, இவற்றுக்கெல்லாம் பொதுவான விடயம் யாது?
இவை ஸ்மார்ட்போனின் புகைப்படவியல் தொகுதியை உருவாக்கும் “மூலக்கூறுகள்” அல்லது கட்டமைப்புத் தொகுதிகள் என்பதுடன், சிறந்த புகைப்பட செயல்திறனுக்கான வன்பொருள் அடித்தளத்தையும் அவை உருவாக்குகின்றன. vivo வை பொறுத்தவரை, இந்த புகைப்படவியல் கூறுகள் மேலும் ஒரு படி மேலே பார்க்கப்படும் விடயமாகும். அவை vivoவின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மூலோபாயத்தை ஆதரிக்கின்றன.
சமீபத்தில், vivo அதன் டோக்கியோ R&D மையத்தின் செயற்பாடுகளை பகிர்ந்து கொண்டது. அதிலுள்ள ஜப்பானிய நிபுணர் குழு, சுவாரஸ்யமான புகைப்படவியல் தொழில்நுட்பம், R&D தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விடயங்கள் பற்றி இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டோக்கியோ Tokyo R&D மையத்தின் பிரதான நிபுணரான Masazumi இது பற்றி மேலும் பல தகவல்களை வழங்கியிருந்தார்.
vivo Tokyo R&D மையத்தின் அறிமுகம்
2019ஆம் ஆண்டில், டோக்கியோவின் Shimbashi நகரில் vivo Tokyo R&D மையம் நிறுவப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான, முற்கூட்டிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பில் அதன் பார்வை அமைந்திருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வரும் விடயங்கள் தொடர்பான முற்கூட்டிய ஆய்வை ஏன் இந்த மையம் நடத்துகிறது? இந்த ஆராய்ச்சி மையத்திற்கான இடமாக டோக்கியோ நகரம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேட, இந்த மையம் நிறுவப்படுவதற்கு முன்னர், 2017ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.
குறித்த ஆண்டில், மொபைல் போன் சந்தையானது மிக வேகமாக வளரும் போக்கைக் கொண்டிருந்தது. பழைய மற்றும் புதிய வர்த்தக நாமங்களுக்கு இடையே இப்போட்டி கடுமையாகக் காணப்பட்டது.
இப்போட்டியானது, சந்தைப்படுத்தலில் இருந்து முக்கிய தொழில்நுட்பங்களை நோக்கி மாறியபோது, வர்த்தகம் மற்றும் உற்பத்தித் தொழிற்துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல்லான “உலகமயமாக்கம்” ஆனது, R&D தொழிற்துறையிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இதே ஆண்டில் தான் vivo தனது உலகளாவிய R&D மூலோபாயத்தை அறிமுகப்படுத்தி ஒரு படி மேலே செல்ல முடிவு செய்தது.
மாறுபட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் (R&D) பணிகளை மேற்கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெறுமதி வாய்ந்த வளங்களை முழுவதுமாக பயன்படுத்துவதே இந்த உத்தியின் பின்னணியில் உள்ள நோக்காகும். vivo Tokyo R&D மையத்தை நிறுவுவதும் இந்த உத்தியை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது.
இது தொடர்பில் Masazumi தெரிவிக்கையில், “கையடக்கத் தொலைபேசி புகைப்படவியல் வளர்ச்சியில் ஜப்பான் 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. புகைப்படச் சுருளிலிருந்து டிஜிட்டல் புகைப்படவியல் (lenses, sensors, motors உள்ளிட்ட) எனும் பாரிய பரிமாண மாற்றங்களுக்கு அது உட்பட்டுள்ளது.” என்றார். கையடக்கத் தொலைபேசி கெமரா தொழில்நுட்பத்தை ஒரு வலுவான மற்றும் முதிர்ச்சியுடனான புகைப்படவியல் துறையின் அடித்தளத்தில் மாத்திரமே உருவாக்க முடியும் என Masazumi நம்புகிறார். Tokyo R&D மையத்தின் தளம் டோக்கியோ நகரத்தில் அது அமைந்திருப்பதில் இது மிகப்பெரிய நன்மையாகும்.
டோக்கியோ R&D மையம் தொடர்ந்து வளர்ச்சியடையும்போது, அதன் கவனம் முழுவதும் மொபைல் போன் புகைப்படவியலிலிருந்து படிப்படியாக கார் கெமராக்கள், விளையாட்டுப் போட்டி கெமராக்கள், தொழில்துறை கெமராக்கள் போன்ற முக்கிய பகுதிகளை நோக்கி விஸ்தரிக்கப்பட்டது.
இந்த தொழில்நுட்பங்கள் ஏனைய சந்தைகளில் முழுமையாக வெளிவராமல் இருக்கலாம். ஆனால் vivo வின் தனித்துவமான gimbal camera வின் அறிமுகம் மற்றும் vivo வின் உலகளாவிய உற்பத்தித் தளங்களின் நிறுவல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, மேற்கூறிய தொழில்நுட்பங்களின் வெற்றிகரமான பயன்பாடு எதிர்பார்க்கப்படுகிறது.
Vivo வின் எதிர்காலத்திற்கான திட்டமிடலின் அடிப்படையில் நுகர்வோரின் தேவைகள் அதன் மையத்தில் உள்ளன
vivo வின் பெருநிறுவன கலாசாரத்திற்கு அமைவாக, பயனர்களைச் சார்ந்து இருப்பது vivo வின் R&D பணிகளுக்கு வழிகாட்டும் முக்கிய கொள்கையாக உள்ளது. அது gimbal camera ஆக இருந்தாலும் சரி, V1 imaging chip ஆக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் vivo வின் உள்ளார்ந்த ஆய்வு மற்றும் நுகர்வோரின் தேவைகளின் ஒட்டுமொத்த மதிப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும்.
சமீபத்திய தரவுகள் மற்றும் தொழில்நுட்பப் போக்குகள் தொடர்பில் தலைமையகத்துடன் பரிமாறப்பட்ட தகவலின் அடிப்படையில் கருத்து வெளியிட்ட Masazumi, “தற்போது நாம் ஒன்லைன் சந்திப்புகளையே பெரும்பாலும் நம்பியிருக்கின்ற போதிலும், உண்மையில் நாம் முன்னரை விட தற்போது அதிகமாகவே தொடர்பாடலை மேற்கொள்கிறோம் என்பதுடன் தகவல் பரிமாற்றம் முன்னெப்போதையும் விட மிருதுவாக உள்ளது.” என்றார். தலைமையகத்தில் உள்ள திட்டமிடல்/ தயாரிப்புக் குழுவானது, பயனர் கருத்துகளின் அடிப்படையில் ஸ்மார்ட்போன் புகைப்படவியலின் எதிர்கால ஆராய்ச்சிப் போக்குகளை பகுப்பாய்வு செய்கிறது. அதிலிருந்து கிடைக்கும் தகவல் டோக்கியோ R&D குழுவுடன் பகிரப்படுகின்றது.
இந்த செயல்பாடுகளின் மூலம், உலகளாவிய ரீதியிலான கேள்விகள் மாற்றமடைந்து வருவதை Masazumi உணர்ந்தார். “உலகளாவிய நுகர்வோர் HD புகைப்படவியல் மீது அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர், ஆனால் கையடக்கத் தொலைபேசியில் வில்லைத் தொகுதிகளை வைப்பதற்கு மிக மிக குறைவான இடமே காணப்படுகின்றது.” என்கிறார்.
இந்த முரண்பாட்டின் அடிப்படையில், எதிர்கால புகைப்படவியல் வன்பொருள் மேம்படுத்தல் தொடர்பான முக்கிய பாதையானது, அதை ‘miniaturized and integrated’ (மிகச் சிறியதாகவும் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும்) மாற்றுவதை நோக்கியதாக அமைய வேண்டுமென Masazumi நம்புகிறார். இதை விளக்கிய அவர், “இப்போது கெமரா லென்ஸ்கள் வழமையான வகையில் அமைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் அவை, அதிக உணர்திறன் மற்றும் வேகமான சென்சர்களுடன் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்ட தனி ஒரு பகுதியாக ஒருங்கிணைக்கப்படலாம்.” என்றார்.
டோக்கியோ R&D மையம் அமைக்கப்பட்டிருக்கும் விதமானது, vivo வின் உலகளாவிய R&D மூலோபாயத்தின் சுருக்கமான வடிவமாகும். 2017இல், vivo அதன் தொழில்நுட்ப ஆராய்ச்சியை, இனிமேல் தனியான ஒரு அம்சத்தில் கவனம் செலுத்தாமல், ஸ்மார்ட்போனை அதன் ஒட்டுமொத்த புத்தாக்க கண்டுபிடிப்பு எனும் வகையில் முழுமையாக கவனம் செலுத்துமென முன்மொழிந்தது.
இந்த இலக்கை அடைய, Shenzhen, Dongguan, Nanjing, Beijing, Shanghai, Hangzhou, Xi’an, Taipei, San Diego, Tokyo ஆகிய இடங்களில் vivo அதன் 10 R&D மையங்களை அமைத்துள்ளது. இவை, 5G, செயற்கை நுண்ணறிவு, தொழில்துறை வடிவமைப்பு, புகைப்படவியல் தொகுதி உள்ளிட்ட வெளிவரவுள்ள பல்வேறு தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. (END)
Recent Comments