பின்னடைவான டிசம்பர் பருவத்திலும் கூட சீரான விநியோகத்தை உறுதி செய்யும் பெல்வத்தை
இலங்கையின் மிகப் பெரும் பால் உற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited (PDIL), இலங்கையின் பால் துறையில் ஏற்படும் வருடாந்த ‘டிசம்பர் – ஏப்ரல் பின்னடைவான பருவத்தில்’ அதன் உற்பத்திகளையோ வெளியீடுகளையோ குறைக்கவில்லை என்பதுடன், அதனை திறன்பட வழிநடத்தி வருகின்றது.
Pelwatte Dairy Industries Limited நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் சுசந்த மல்வத்த இது தொடர்பில் தெரிவிக்கையில், “PDIL உற்பத்தி இடைநிறுத்தப்படுவதாக அல்லது பெல்வத்த தயாரிப்புகளில் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. பெல்வத்தை தொழிற்சாலைகள் வழமைபோன்று தமது உற்பத்தியை தொடர்ந்த வண்ணம் உள்ளன. வருடாந்த ‘டிசம்பர்-மார்ச்’ காலப் பகுதியான, தொழில்துறை உற்பத்தி குறைவு காலப் பகுதியில், உற்பத்தி அளவுகளில் குறிப்பிடும்படியான சரிவு மாத்திரமே உள்ளது. டிசம்பர்-மார்ச் காலகட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் வழக்கமான பருவகால உற்பத்தி வீழ்ச்சிக்கான காலகட்டமாகும். இது Pelwatte Dairy இற்கு மாத்திரமல்ல, இலங்கையின் அனைத்து பால் உற்பத்தியாளர்களும் எதிர்நோக்குகின்ற மற்றும் தொழில்துறை விநியோகச் சங்கிலிகளில் தொடர்ந்து நிலவுகின்ற விடயமாகும். மே-ஜூன் முதல் ஒக்டோபர் வரை, பால் பதப்படுத்தல் சந்தைக்கு அதிக பால் கிடைக்கப்பெறுவதால், அந்தக் காலகட்டத்தில் அதிக பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேவேளை, டிசம்பர் – மார்ச் மாதம் குறைந்த உற்பத்தி பருவமாகும். இதுவே தற்போது நிலவி வருகிறது. மே-ஒக்டோபர் மாதங்களிலான அதிக பால் விளையும் பருவமானது, டிசம்பர் மாதமளவில் குறைந்துவிடுகின்றது. பசுக்கள் தங்களது கருத்தரிக்கின்ற மற்றும் பிரசவத்திற்கான அடுத்த சுழற்சியை ஆரம்பித்து விடுவதே இதற்கான காரணமாகும். குறைந்த பால் உற்பத்தி தொடர்பான இந்நிகழ்வுகள், விவசாய சமூகத்திற்கான அதன் உதவியை PDIL தொடர்வதைத் ஒருபோதும் தடுக்காது.
2020/2021 இல், PDIL அதன் விவசாயிகளின் தளத்தை 16% ஆக அதிகரித்ததுடன், 10,000 இற்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய குடும்பங்களுக்கு இதன் மூலம் ஆதரவளித்துள்ளது. அத்துடன் தேசிய பால் விநியோகச் சங்கிலியில் அதன் தனிப்பட்ட பங்களிப்பையும் மேற்கொள்கின்றது. உண்மையில், கொவிட் தொற்றுநோய் பாதிப்பு காரணமாக 2020/2021 இல், PDIL இன் விவசாயிகளின் வருமானம் 70% ஆக அதிகரித்தது. நிச்சயமற்ற காலகட்டங்களில், நிறுவனத்தின் உற்பத்திச் செயல்முறையில் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிசெய்ததுடன், அதன் மீளெழுச்சியும் இடம்பெற்று வந்தது. இதன்போது ஒரு சில பிரிவுகளிலான அதன் உற்பத்தி வெளியீடு இரட்டிப்பாகவும் அமைந்ததன் மூலம், 2020/2021 ஆனது PDIL இற்கு ஒரு வெற்றிகரமான ஆண்டாக மாறியது. 2019/2020 உடன் ஒப்பிடுகையில், PDIL இன் மொத்த இலாபம் சுமார் இரு மடங்காக அதிகரித்து, 180% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், வரிக்கு முன்னரான இலாபமும் (PBT) 148% ஆக அதிகரித்துள்ளது.
“இதில் நல்ல செய்தி யாதெனில், நாம் இப்போது பின்னடைவான பருவத்தில் இருந்தபோதிலும், நாம் இந்த நிலைமையை எதிர்பார்த்து முன்கூட்டியே திட்டமிட்டுள்ளதனால், PDIL தொழிற்சாலைகள் அதன் உற்பத்திகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன” என பிரதிப் பொது முகாமையாளர் சுசந்த மல்வத்த தெரிவிக்கிறார்.
Recent Comments