இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் குழு Tech4Good இல் Huawei எதிர்காலத்துக்கான விதைகள் திட்டத்தில் வெற்றிபெற்று ஜனவரி 2022 இல் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது
இலங்கையிலுள்ள 6 பல்கலைக்கழகங்களில் இருந்து 18 பல்கலைக்கழக திறமைசாலிகள் எதிர்காலத்திற்கான Huawei விதைகள் திட்டத்தில் பட்டம் பெற்றனர்
அண்மையில் Huawei எதிர்காலத்துக்கான விதைகள் (Seeds for the Future) திட்டத்தில் பங்குபற்றிய 18 இளம் இலங்கைப் பல்கலைக்கழகத் திறமையாளர்களில் 10 திறமையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘Futurecasters’ குழு, சிங்கப்பூர், புருனே மற்றும் இலங்கை மாணவர் அணிகளில் தமது வகுப்புக் குழுவில் Tech4Good திட்டத்தின் வெற்றியாளர்களானது . 2022 ஜனவரியில் நடைபெறவுள்ள Huawei யினால் நடத்தப்படும் குளோபல் Tech4Good போட்டியில் இணைவதற்கான பட்டியலிடப்பட்ட குழு, மேலும் ஒவ்வொரு குழுவும் தங்கள் திட்டங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வழிகாட்டிகளுடன் இணைந்து பணியாற்றியது.
புதிதாகத் தொடங்கப்பட்ட, Tech4Good Group Project ஆனது Huawei இன் உலகளாவிய CSR திட்டத்தின் ஒரு பகுதியாகும் – எதிர்காலத்திற்கான விதைகள் மற்றும் உலகத்தின் அல்லது அவர்களின் சமூகத்தின் மிக முக்கியமான சமூக, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்க்க தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஆய்வு செய்வதற்கான சவாலை பங்கேற்கும் மாணவர்களுக்கு வழங்குகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுடன் குழு வேலை செய்வதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் சமூக தொழில்முனைவு திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன்கள் மற்றும் தலைமைத்துவ திறன்களை அதிகரிக்க வேண்டும்.
இன்றைய நவீன ICT ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளும் முக்கிய சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றான இலங்கையைச் சேர்ந்த வெற்றி பெற்ற மாணவர்களின் குழுவானது – ‘Futurecasters’ ஒரு தொழில்நுட்பத் தீர்வை முன்வைத்தது. கணினியின் முன் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் தோரணை.
2021 Huawei Seeds for the Future திட்டமானது நேரடி ஒளிபரப்பு அமர்வுகள் மற்றும் Huawei இன் ஒன்லைன் பிளாட்ஃபார்மில் அணுகக்கூடிய முன் பதிவு செய்யப்பட்ட கற்கைகள் மூலம் பயிற்சியை உள்ளடக்கியது. அமர்வுகளுக்கு மேலதிகமாக, மாணவர்கள் Huawei இன் அதிநவீன கண்காட்சி அரங்குகளை மெய்நிகர் வழியாக மேற்கொள்வதற்கும், சமீபத்திய தொழில்நுட்பங்களில் ICT பயிற்சியுடன் கூடிய நடைமுறை பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது.
Huawei விதைகளின் எதிர்காலத்திற்கான பட்டமளிப்பு விழா 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது மற்றும் சீன மக்கள் குடியரசின் இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன்ன, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மற்றும் Huawei அதிகாரிகள் ஆகியோரின் பிரசன்னத்துடன் ஒன்லைனில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் கலாச்சார பாடல் நிகழ்ச்சி உட்பட மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த வருடத்தின் 18 மாணவர்களுடன், மொத்தம் 74 இலங்கைப் பல்கலைக்கழக திறமையாளர்கள் எதிர்காலத்திற்கான விதைகளில் பங்குபற்றியுள்ளனர், மேலும் இந்த நிகழ்ச்சித்திட்டமானது தற்போது இலங்கையில் 2021 ஆம் ஆண்டோடு அதன் 6ஆவது வருடத்தில் இலங்கையின் ICT துறையில் வருடாந்த குறியீட்டுத் திட்டமாக அமைந்துள்ளது. இலங்கையில் கல்வி அமைச்சுடன் Huawei நிறுவனத்தால் இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
Recent Comments