Sri Lanka Institute of Marketing அறிமுகப்படுத்தும் SLIM DIGIS 2.1
எதிர்காலத்திற்கு தயாராகும் இலங்கைக்கு அதிகாரம் வழங்குகிறது
இலங்கையின் தேசிய சந்தைப்படுத்தல் தொடர்பான நிறுவனமான, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM), இலங்கையின் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க டிஜிட்டல் விருது வழங்கும் விழாவான SLIM DIGIS 2.1 நிகழ்வு தொடர்பில், கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி ஒன்லைன் மூலம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிமுகம் செய்து வைத்தது.
புத்தாக்கம் மற்றும் திறமைகளுக்கு அங்கீகாரம் வழங்கி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொழில்துறையில் உள்ளவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் ஒரே விருது விழாவான இது, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இடம்பெறுகின்றது. வங்கி மற்றும் நிதி, காப்புறுதி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், இணையம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சாதனைகளுக்கு இவ்விருது விழாவில் அங்கீகாரம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டைப் போன்று, இவ்வாண்டும், முக்கிய மற்றும் விசேட விருது வகைகளை உள்ளடக்கியதாக DIGIS 2.1 அமையவுள்ளது. இவ்வாண்டில் இரண்டு புதிய விசேட விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் ‘Best Response to COVID-19’ (‘கொவிட்-19 இற்கு சிறந்த பதிலளிப்பு’) எனும் புதிய விருதானது, தற்போதுள்ள கொவிட்-19 நிலைமைகளின் கீழான ‘புதிய சாதாரண நிலை’ (New Normal) இன் கீழ், சவால்களை எதிர்கொண்டு, புதிய வாய்ப்புகளை அடையாளம்கண்டு, வாடிக்கையாளர்களை அதில் இணைத்து வணிகங்களை செயற்படுத்தும் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்கான கௌரவிப்பாக இவ்விருது அமையும். அத்துடன் ‘Best Use of Data’ (தரவின் உரிய வகையிலான பயன்பாடு) இது, தரவுகளால் செயற்படுத்தப்படும் அல்லது மேம்படுத்தப்படும் உயர் மட்ட டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டங்களை கௌரவப்படுத்துவதற்கான விருது என்பதுடன், தரவுகளை அர்த்தமுள்ளதாக மாற்றி புத்தாக்க சந்தைப்படுத்தல் கலவையாக அதனை செயற்படுத்தி சந்தைப்படுத்தலின் இலக்கை அடையும் வகையிலான எந்தவொரு சந்தைப்படுத்தல் யோசனையும் இவ்விருதுக்காக கோரப்படுகின்றது. கொவிட்-19 தொற்றுநோயானது உலகளாவிய ரீதியில் அனைத்து வணிகங்களையும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், தொற்றுநோயை எதிர்கொண்டு சவால்களுக்கு முகம் கொடுத்து, டிஜிட்டல் சந்தைப்படுத்தலை மேற்கொண்டு வரும் தொழிற்துறையாளர்களுக்கு, இப்புதிய விருதுகளானவை, மேலும் ஒரு கௌரவமாக அமையும்.
SLIM DIGIS 2.1 விருதுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட SLIM தலைவர் திலங்கா அபேவர்தன, “எமது முதன்மை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருது விழாவை தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக முன்னெடுப்பதில் நாம் பெருமிதமடைகிறோம். இவ்வாய்ப்பை நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்ய விரும்புகிறோம். கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் கடந்த ஆண்டில் எமக்கு கிடைத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையானது எம்மை ஆச்சரியப்படுத்தியது. டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் விருது வழங்கும் ஒரே நிகழ்வு எனும் வகையில், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொழில்துறையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நாம் தெரிவிக்க விரும்புகிறோம். வணிகங்களின் தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்ய, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சேவை வழங்குனர்கள் தமது சிறந்த வெளிப்படுத்தல்களை வழங்குவது மிகவும் முக்கியமாகும். SLIM DIGIS அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொழில்துறையாளர்களுக்கு அவசியமான உத்வேகத்தை வழங்கி வருவதுடன், தொழில்துறையின் சிறந்த சாதனைகளுக்கான உரிய கௌரவத்தையும் வழங்கும் ஒரு தளமாக அது இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.” என்றார்.
Projects & Sustainability (திட்டங்கள் மற்றும் நிலைபேறு தன்மை) பிரதித் தலைவர் சிந்தக பெரேரா இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் சந்தைப்படுத்தலானது வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறையாகும். இது அனைத்து மட்டங்களிலும் உள்ள வணிகங்களை வழிநடாத்தும் திறனைக் கொண்டுள்ளது. சந்தைப்படுத்தலின் எதிர்காலம், டிஜிட்டல் என்பதில் சந்தேகமில்லை என்பதுடன், டிஜிட்டல் அரங்கில் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய இத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு நாம் உதவ வேண்டும். அந்த வகையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பான பிரத்தியேகமான விருது வழங்கலானது இத்துறையில் மிகப் பெரிய முன்னோக்கிய நகர்வாகும். இத்துறையிலுள்ள தொழில்துறையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, SLIM DIGIS போன்ற முதன்மையான விருது வழங்கும் விழா மூலம் வழங்கப்படும் ஊக்குவிப்பானது, அவர்கள் தொடர்ந்தும் அத்துறையில் பாடுபடவும், அதில் உயரங்களை அடையவும் அவர்களை ஊக்குவிக்கும்” என்றார்.
SLIM DIGIS 2.1 திட்டத்தின் தலைவர் கயான் பெரேரா கருத்து வெளியிடுகையில், “ஒரு தொழில்முறை ரீதியான சந்தைப்படுத்தல் நிறுவனமான SLIM, இலங்கையில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையை மேம்படுத்துவற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ‘Future Ready Sri Lanka’ (எதிர்காலத்திற்கு தயாராகும் இலங்கை) என்பதன் மூலம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு நாம் தொடர்ந்தும் செயற்படுவோம்.” என்றார்.
SLIM DIGIS 2.1 விழாவில் வெற்றியாளர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல விருதுகளைப் பெறுவார்கள். அத்துடன் மாபெரும் விருதுகள், பிரதான மற்றும் விசேட விருது வகைகளில், அதிக புள்ளிகளைப் பெறும் வணிகங்கள் அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்படும். SLIM DIGIS 2.1 விருதுகள், தொழில்துறை வல்லுனர்களின் சுயாதீன நடுவர்கள் குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது.
SLIM பற்றி
Sri Lanka Institute of Marketing (SLIM) ஆனது இலங்கை சந்தைப்படுத்தல் சேவை வழங்குனர் தொடர்பான உச்ச அமைப்பாகும். 1970 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, 1980 இல் பாராளுமன்ற சட்டத்தால் கூட்டிணைக்கப்பட்டு, ‘இலாப நோக்கமற்ற’ தேசிய சந்தைப்படுத்தல் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட SLIM ஆனது, தொடர்ச்சியாக சந்தைப்படுத்தல் தொடர்பான உயர்வுகளை ஊக்குவித்து, சந்தைப்படுத்தலின் நிலையை உயர்த்தி வருகின்றது. அது தவிர, SLIM Nielsen Peoples Awards, Brands Excellence, NASCO, Effie விருதுகள் போன்ற இலங்கையின் மிகப் புகழ்பெற்ற பலராலும் அறியப்பட்ட விருது விழாக்களிலும் பிரதான பங்குதாரராகவும் உள்ளது.
Recent Comments