பல்வேறு தீர்வுகளை வழங்கி இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான DIMO, சுகாதாரத்துறையில் தயாரிப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், இலங்கையின் சுகாதாரத்துறையை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது. சுகாதாரத் துறையில் DIMO அதன் சமீபத்திய இருதய மருத்துவம் தொடர்பான சாதன வெளியீட்டின் மூலம், உலகின் முன்னணி தரக்குறியீட்டு பிரதிநிதித்துவத்தைப் உறுதிப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையின் இருதயவியல் பிரிவில் அதன் வலுவான நிலையை மேலும் விரிவடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

இருதய மருத்துவ சாதனங்களை தனது குடையின் கீழ் கொண்டு வந்துள்ளதன் மூலம், DIMO தற்போது நாட்டின் இருதயவியல் தொடர்பான சுகாதார தேவைகளுக்கு சேவை செய்ய முழுமையாக தயாராகியுள்ளது. அத்துடன், முன்னணி உலகளாவிய தரக்குறியீடுகளுடன் இணைந்து அறுவை சிகிச்சை கருவிகளை விநியோகிக்க DIMO முன்வந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த சுகாதாரத் துறை தொடர்பான தீர்வுகளை வழங்க நிறுவனம் உதவுகின்றது. அந்த வகையில், கதிரியக்கவியல், இருதயவியல், கண் மருத்துவம், புற்றுநோயியல், சிறுநீரக நோயியல், பிறந்த குழந்தை பராமரிப்பு, சிக்கலான பராமரிப்பு, மயக்கவியல், இருதயவியல் சாதனங்கள் போன்ற சுகாதாரத் துறையின் பல துறைகளிலும் DIMOவின் பரந்த அளவிலான சுகாதாரத் தீர்வுகளானவை தற்போது விரிவாக்கமடைந்துள்ளன.

DIMO தலைவரும், அதன் நிர்வாக பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஒரு ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் நோக்குடன், இலங்கைக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதார தீர்வுகளை வழங்குவதில் DIMO முன்னோடியாக இருந்து வருகின்றது. சுகாதார சேவை வழங்குநர்களின் உரிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தயாரிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் துல்லியமான முறையில் மருத்துவத்தை அணுகவும், சுகாதார பராமரிப்பு நடைமுறையில் மாற்றத்தை மேற்கொள்ளவும், நோயாளிகள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், நோயாளியின் மருத்துவ அனுபவத்தை மேம்படுத்தவும் DIMO உதவி வருகின்றது.” என்றார்.

DIMO பணிப்பாளர் விஜித் புஷ்பாவெல தெரிவிக்கையில், “தெல்தெனிய, கம்புறுபிட்டிய, வவுனியா, பிபிலை, கந்தளாய், டிக்கோயா, கிண்ணியா, மூதூர், ரிக்கிலகஸ்கட போன்ற கிராமங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் உலகளாவிய புகழ்பெற்ற தரக்குறியீடுகளான Siemens மற்றும் Drager ஆகியவற்றின் கதிரியக்கவியல் மற்றும் சிக்கலான பராமரிப்பு போன்ற விடயங்களுக்கான உபகரணங்களை DIMO விநியோகித்துள்ளது. உள்நாட்டு தனியார் சுகாதார சேவைத் துறையை மேம்படுத்தும் வகையில், நாட்டின் முன்னணி தனியார் மருத்துவமனைகளுக்கு கதிரியக்கவியல் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களையும் நாம் வழங்கியுள்ளோம்.” என்றார்.

Premium LSO அடிப்படையிலான கண்டறிதல் தொழில்நுட்பத்துடன் கூடிய PET ஸ்கேனர்களை இலங்கைக்கு முதலில் அறிமுகப்படுத்தியது DIMO ஆகும். இந்த அதிநவீன தொழில்நுட்பமானது, மிகவும் துல்லியமான தகவலை பெற உதவுவதுடன், பல தனித்துவமான நன்மைகளையும் வழங்குகிறது. இதன் விளைவாக முற்கூட்டியே நோயை அறிவற்கான அதிக சாத்தியம் மற்றும் அதனுடன் இணைந்த மிக உறுதிப்பாட்டுடன் கூடிய சிகிச்சை உத்திகளை கையாளவும் வசதி ஏற்படுவதோடு, இதன் மூலம் நோயாளிகளுக்கான தீர்வுகளை விரைவாகவும் இலகுவாகவும் பெற உதவுகிறது. கண் சிகிச்யைில், வழக்கமான 45 பாகை கோணத்தில் விரிவாக்கத்தில் அல்லாது, விழித்திரையின் 133 பாகை கோணத்தில் விரிவாக்கத்தை கண்டறியும் திறனை வழங்கும் Wide Angle Fundus Phototherapy இனை (Carl Zeiss) முதன்முதலில் அறிமுகப்படுத்தியது DIMO ஆகும். இது நீரிழிவு காரணமான கண் பிரச்சினையின் (Diabetic retinopathy) ஆரம்ப நிலை அறிதலை மேம்படுத்துவதுடன், நோயாளிக்கும் சொகுசானதாக அமைகின்றது.

இது தொடர்பில் புஷ்பாவெல மேலும் தெரிவிக்கையில், “Carl Zeiss Multi Spot Green Laser எனும் லேசர் சிகிச்சை நுணுக்குக்காட்டியை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ‘முதன் முதலில்’ செய்த சாதனைகளை நாம் கொண்டுள்ளோம். குறித்த நுணுக்குக்காட்டி நீரிழிவு நோயளிகளுக்கு ஏற்படும் (retinopathy) ரெட்டினோபதி சிகிச்சையை இலகுபடுத்துவதோடு, நோயாளிக்கு அதிக சொகுசையும் வழங்குகிறது” என்றார்.

“விற்பனைக்கு பின்னரான பராமரிப்பு சேவையை வழங்குவதானது நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த பகுதியாகும். DIMO வின் சுகாதார பராமரிப்பு மற்றும் சேவைக் குழுவானது நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதனை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 24 மணி நேரமும் தனது வழக்கமான பராமரிப்பு மற்றும் சேவைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இத்தகைய தொழில்முறை ரீதியிலான அணுகுமுறை காரணமாக, கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட ஏனைய உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொற்றுநோயின் போது அவசியமாகும் ஏனைய அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை எவ்வித தடையுமின்றி வழங்க உறுதி செய்கிறது.” என புஷ்பாவெல சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய தரத்திற்கு இணையாக, படிப்படியாக சுகாதாரத்துறையில் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு வருவதன் காரணமாக, சிறந்த நோயறிதல் மற்றும் அதன் காரணமான சிறந்த சிகிச்சைகளை பெற நோயாளிகளுக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் காரணமான பயனடைந்த அனைத்து துறைகளிலும் பார்க்க சுகாதார பராமரிப்புத் துறையே மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. இதன் விளைவாக, படிப்படியாக பொது மக்களின் வாழ்க்கை தரத்தை அது மேம்படுத்தியுள்ளதுடன் பல உயிர்களை காப்பாற்றவும், தொடர்ந்தும் காப்பாற்றிய வண்ணமும் இருக்கிறது. உள்நாட்டு சுகாதாரத் துறையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும், உலகளாவிய தரத்திற்கு மாற்றியமைக்கப்பட்ட சமீபத்திய தொழில்நுட்பத்திற்கு அதனை புதுப்பிப்பதற்காகவும், உள்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் தொடர்ந்தும் தொடர்புகளை பேணுவதன் முக்கியத்துவத்தை DIMO அறிந்துள்ளது. ஒரு பொறுப்பு வாய்ந்த பெரு நிறுவனம் எனும் வகையில், சுற்றுச்சூழல் தொடர்பான உலகளாவிய ரீதியிலான கரிசனைகளைப் பேணி இவையனைத்தும் மேற்கொள்ளப்படுவதுடன், தேவையற்ற கதிர்வீச்சுகள் மற்றும் நோயாளிகள் தொடர்பான பிழையான தரவுகளையும் குறைக்க உதவுகிறது. அத்துடன், வருடாந்தம் இவை தொடர்பான விளக்க அமர்வுகளை ஏற்பாடு செய்வதுடன், அது தொடர்பான செயன்முறை விளக்கங்களை நடாத்துவதன் மூலம், உலகளாவிய புகழ்பெற்ற மருத்துவர்கள் மூலம் தொழில்நுட்பம் மற்றும் நோயறிதலின் அடிப்படையிலான உலகளாவிய நவீன போக்குகள் தொடர்பில், உள்நாட்டு மருத்துவர்கள் அறிந்து கொள்ள DIMO வசதியளிக்கிறது.

சுகாதாரத் துறையானது மிகப் பாரிய, வேகமாக வளர்ந்து வரும் செயற்பாட்டு களம் என்பதை DIMO அறிந்துள்ளது. எதிர்காலத்தில், இலங்கையில் வயதான மக்கள் தொகையின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமென அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. எனவே அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டு சுகாதாரத் துறை தயாராக வேண்டும். அவர்களின் வயது அதிகரிக்கும்போது, மருத்துவ ரீதியிலான சோதனைகள் தொடர்பில் அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இத்துறையில் செயல்படுபவர்கள் எனும் வகையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும். உலகளாவிய தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் தரக்குறியீடுகளை DIMO பிரதிநிதித்துப்படுத்துகிறது. தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியன கருவியில் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம், ஒரு சில ஸ்கேன்களுக்கு எடுக்கும் நேரம் வெகுவாகக் குறைக்கப்படுவதோடு, துல்லியமான நோயறிதலுக்கும் அது வழி வகுக்கிறது. இது சோதனைக்கு உட்படுத்துவதன் காரணமாக நோயாளிகளை ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து அவர்களை விடுவிப்பதுடன், ஒட்டுமொத்த அனுபவத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது.

முற்றும்

புகைப்பட விளக்கம்:

கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் மருத்துவ உபகரணங்களின் சீரான செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், DIMO வின் சுகாதார சேவை தொடர்பான பராமரிப்பு குழு தொடர்ச்சியான பணியில் ஈடுபட்டுள்ளது…

Share

You may also like...