ஓகஸ்டின் மிகப்பெரும் ஒன்லைன் விற்பனையான Daraz Mobile Week இல் realme

ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் விற்பனையின் ஆரம்பத்துடன், ​​உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, அதன் புதுமையான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்களை அதன் முதன்மை விற்பனைக் கூடத்தில் (Flagship Store) காட்சிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் விற்பனைத் தளமான Daraz.lk, அதன் மிகப்பெரிய ஒகஸ்ட் மாத ஒன்லைன் விற்பனையை ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது. Daraz Mobile Week (DMW) என அழைக்கப்படும் இவ்விற்பனை நிகழ்வு, நாட்டின் மிகப்பெரிய ஒன்லைன் சந்தையான Daraz இனால் ஒகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடாத்தப்படும் மிகப்பெரிய ஒன்லைன் விற்பனை திருவிழாவாகும். DMW ஆனது ஒரே இடத்தில் சிறந்த சலுகைகளைக் கொண்டுவருவதுடன், வாடிக்கையாளர்களை ‘பழையவற்றை களைந்து, புதியவற்றுடன் வெளியேற செல்ல’ வலியுறுத்துகிறது. DMW யில் வழங்கப்படும் சலுகைகளில், பல்வேறு வகையான கையடக்கத் தொலைபேசிகள் (ஸ்மார்ட்போன்கள்), டெப்லட்டுகள், இலத்திரனியல் பாகங்கள், ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அணிகலன்கள் ஆகியன இலவசமாக வீட்டுக்கே விநியோகிக்கும் வசதியுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

சமீபத்தில் Daraz.lk இன் மொபைல் மற்றும் டெப்லட் தரக்குறியீடு பட்டியல்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடித்துள்ள realme, ஒன்லைன் கொள்வனவாளர்களுக்கான பல்வேறு தள்ளுபடிகளை Daraz DMW இல் வழங்கியுள்ளது.

realme Sri Lanka சந்தைப்படுத்தல் தலைவர் Shawn Yan இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “realme இலங்கை சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக மாறியுள்ளது. Realme சமீபத்தில் Daraz.lk இன் மொபைல் மற்றும் டெப்லட் வகைகளின் பட்டியல்களில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. realme ஆனது அதற்கு வழங்கப்பட்டுள்ள Flagship Store யில் 93% சிறந்த விற்பனையாளர் மதிப்பீட்டை அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுள்ளது. ஓகஸ்ட் DMW விற்பனையில் realme யின் தள்ளுபடிகளை அறிய Daraz இல் அமைந்துள்ள Flagship Store (rFS) வழியாக https://click.daraz.lk/e/_7nBJg இனை அணுகவும். DMW விற்பனையில் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு realme வழங்கும் பல்வேறு பரிசுகளும் காத்திருக்கின்றன. realme, இளைஞர்களை மையமாகக் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடாகும். இது வந்து மூன்று ஆண்டுகளில் அதன் ஆரம்பத்திலேயே உலகின் 61 சந்தைகளில் நுழைந்தது. தற்போது சந்தையில் 200 இற்கும் மேற்பட்ட மொபைல் போன் தரக்குறியீடுகள் இருந்த நிலையிலும் 2018 இல் “Dare to Leap” (முன்னேற பயமில்லை) எனும் உயிர் நாடியுடன் realme நிறுவப்பட்டது. realme தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக மாறியுள்ளது. realme அதன் DMW விற்பனையில் கூட அதன் எண்ணக்கருவான “Dare to Leap” என்பதை நிலைநாட்டும்.

இலங்கையில் realme யினை தேடும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஒன்லைனில் சலுகைகளைத் தேடும் பயனர்களுக்கு, Https://click.daraz.lk/e/_7nBJg எனும் தளம் ஊடாக, realme இன் Flagship Store இனைப்  பார்வையிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Realme பற்றி:

Realme என்பது ஒரு தொழில்நுட்ப தரக்குறியீடாகும். இது முன்னணி தரம் மற்றும் காலத்திற்கு ஏற்ற நவீனத்துவமான ஸ்மார்ட்போன்களாகும் என்பதுடன் அது AIoT தயாரிப்புகளை உலக சந்தைக்கு வழங்குகிறது. Realme பயனர்கள், இளமை மற்றும் உலக அளவிலான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். Realme தயாரிப்புகள் யாவும், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைப் பயன்படுத்தி இளைஞர்களை ‘துள்ளுவதற்கு துணிய’ வழி வகுக்கின்றன. Realme உலகின் 7ஆவது சிறந்த ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக விளங்குவதோடு, 2020 இன் 3ஆவது காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகளின் Counterpoint புள்ளி விபரங்களின்படி பிரதான ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், Realme இனது உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 25 மில்லியனை எட்டி, அது வருடத்திற்கு வருட (YoY) வளர்ச்சி 808%  விகிதத்தை அடைந்ததன் மூலம், 2019 இலிருந்து 2020 இரண்டாம் காலாண்டு வரை தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் Realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 70 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Daraz.lk பற்றி:

Daraz ஆனது தெற்காசியாவில் மாத்திரமல்லாது இலங்கையிலும் முன்னணி ஒன்லைன் சந்தையாக விளங்குகின்றது. 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட இது, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியன்மார், நேபாளம் ஆகிய நாடுகளில் உயிர்ப்பாக இயங்கி வருகின்றது. பரந்துபட்ட வகையில் வடிவமைக்கப்பட்ட சந்தைப்படுத்தல், தரவு, சேவைத் தீர்வுகளால் ஆதரிக்கப்படும் Daraz, 30,000 விற்பனையாளர்களையும் realme உள்ளிட்ட 500 தரக்குறியீடுகளையும் கொண்டுள்ளதுடன், பிராந்தியத்தில் 5 மில்லியன் நுகர்வோருக்கு சேவையளித்தும் வருகிறது.

#நிறைவு#

Share

You may also like...