Realme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Realme, அதன் “Dare to Leap” எனும் எண்ணக்கருவை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில், அதன் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் திரையைக் கொண்ட முன்னிலை தரத்திலான Realme C21Y ஆனது, Flagship தரத்திலான மூன்று லென்ஸ்களைக் கொண்ட கெமராவுடனான ஒரு நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆகும். ரூ. 27,999 என விலை நிர்ணயிக்கப்பட்ட Realme C21Y, அபான்ஸ், சின்ஹகிரி, டயலொக் காட்சியறைகள் மற்றும் ஒன்லைனில் Daraz Realme  flagship store மற்றும் நாடு முழுவதும் உள்ள Realme யின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து கொள்வனவு செய்து கொள்ளலாம்.

realme C21Y ஆனது, நடுத்தர வகை பிரிவில் வகைப்படுத்தப்பட்ட போதிலும், பல முதன்மையான தொலைபேசிகளின் அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 32GB எனும் பெரிய நினைவகத்துடன், இரண்டு சிம் அட்டைகள் (மற்றும் ஒரு SD card) என 3 அட்டைகளுக்கான இடம், மற்றும் அதிவேக கைரேகை உணர்திறன் திறத்தல் மற்றும் முக அடையாளம் காணுதல் அம்சங்களை அது கொண்டுள்ளது. ஆயினும், realme C21Y இன் தனித்துவமான அம்சங்களாக, அதன் 89.5% Mini-drop திரை மற்றும் retro வகை போர்ட்ரைட் புகைப்படங்களுக்கு கறுப்பு – வெள்ளை (B&W) லென்ஸை ஒருங்கிணைக்கும் மூன்று லென்ஸ் கெமரா ஆகியவற்றை குறிப்பிடலாம்.

realme Sri Lanka நிறுவனத்தின் வர்த்தகநாம முகாமையாளர், ரணுர கடுவேலா இது தொடர்பில் விபரிக்கையில், “realme C21Y என்பது ஒரு புதிய மொடலாகும், இது எமது “Dare to Leap” கருப்பொருளுக்கு ஒத்திசைவானதாகும். இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக திகழ்வதற்கான புதுமைகளை உருவாக்க தூண்டும். C21Y இன் பெரிய திரையானது 89.5% திரைக்கு : உடல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இது, 20 : 9 aspect ratio (சமவிகிதம்) மற்றும் Mini-drop அமைப்புடனான, IPS LCD திரை, 16.5 செ.மீ (6.5 அங்குல திரை) ஆகியவற்றுடன் இணைந்த C21Y ஆனது, நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஒன்றின் விலையில் கிடைக்கின்ற, ஒரு சாதாரண ஸ்மார்ட்போனிலும் பார்க்க அதிகமானதாகும். இதன் Mini-drop திரையானது, C21Y இற்கு பெரிய காட்சியைக் கொண்டுவருகிறது. C21Y ஆனது, கடுமையான பல சோதனைகளைத் தாண்டி வழங்கப்படும் TÜV TÜV Rheinland சான்றிதழ் அங்கீகாரம் பெற்றது. சுமார் 23 முக்கிய சோதனைகளைத் தாண்டியே இந்த சான்றிதழ் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் realme C21Y ஆனது, இந்த அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக தாண்டியுள்ளது. அத்துடன் நடுத்தர வகை பிரிவில் மூன்று கெமராக்களை அறிமுகப்படுத்திய முதல் தொலைபேசி வடிவமைப்பும் C21Y ஆகும். இந்த கெமராவின் சிறப்பம்சம் யாதெனில் கறுப்பு – வெள்ளை புகைப்படங்கள் மற்றும் போர்ட்ரைடுகளை எடுக்கும் வகையில் B&W லென்ஸ் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.”

C21Y இல் Mini-drop வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட பெரிய திரையானது, உயர் தெளிவுத்திறனுடனான விளையாட்டுகள், ஓடியோ மற்றும் வீடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதனால் பயனர்கள் பரந்த பார்வையிடல் அனுபவத்தை பெற முடியும். இங்குள்ள நோக்கம், முழுமையான திரை அனுபவத்தை வழங்குவதனை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், காட்சி இடையூறுகள் குறைவாகவே உள்ளன. காட்சி இடையூறுகள் கண் அழுத்தத்தை உருவாக்குவதுடன் குறைந்த தெளிவுத்திறன் மற்றும் குறைந்த பிக்சல் அடர்த்தி காரணமாக இத்தகைய இடையூறுகள் ஏற்படுகின்றன. C21Y திரையின் உள்ளார்ந்த அமைப்பானது, புதிதாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப செயல்முறையை கொண்டமைந்துள்ளது. இது கூறுகளை ஒன்றுக்கொன்று நெருக்கமாக ஈர்க்கிறது, இதனால் பிக்சல் துளிகளின் பரப்பளவு குறைக்கப்பட்டு Mini-drop திரை விகிதம் 89.5% வரை இயங்கும். இந்த வலுவான விகிதம், C21Y இன் 6.5 அங்குல பெரிய மற்றும் முழு பார்வையை கொடுக்கும் போது காட்சி இடையூறுகளை குறைக்கப்படுகிறது.

C21Y ஆனது, நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்களுக்கான TÜV Rheinland சான்றிதழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கிய சந்தைகளுக்கான தொழில் தரத்துடன் அங்கீகாரம் பெற்றது. TÜV Rheinland இனது, புதிய தர சான்றிதழ் தரத்தின்படி, பெரும்பாலான சோதனைகள், ஸ்மார்ட்போனின் மூன்று வருட நிலைப்பை அடிப்படையாகக் கொண்டவையாகும். C21Y இன் TÜV Rheinland ஸ்மார்ட்போன் உயர் நம்பகத்தன்மை சான்றிதழானது, 23 முக்கிய சோதனைகளைக் கொண்டுள்ளது, இதில் 12 தினசரி பயன்பாட்டு சோதனை காட்சிகள் (விழுதல், வைத்திருத்தலின் போதான சில விடயங்கள்) மற்றும் உயர் சுற்றாடல் மாறுபடும் சூழல் சோதனைகள் (அதியுயர் மற்றும் குறைந்த வெப்பநிலைகள், உயர் மற்றும் குறைந்த ஈரப்பதன், மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள், பொத்தான்களின் ஆயுள், நிலையான மின்சாரம், காற்று அழுத்தம்) மற்றும் நான்கு கூறு நம்பகத்தன்மை சோதனைகள் இதில் உள்ளடங்குகின்றன. ஒட்டுமொத்தமாக, TUV ஸ்மார்ட்போன் உயர் நம்பகத்தன்மை சான்றிதழின் பெரும்பாலான சோதனை நிலைமைகள் ஸ்மார்ட்போனின் மூன்று ஆண்டு ஆயுளின் அடிப்படையாக அமைந்துள்ளன.

realme C21Y இன் மூன்று கெமரா, நடுத்தர வகையில் அமைந்த ஸமார்ட்போன்கள் பிரிவில் மூன்று கெமராவை கொண்டமைந்த முதல் மாடலாக C21Y இருப்பதால், இப்பிரிவில் உள்ள போட்டியில் இருந்து இத்தொலைபேசியை தனித்துவம் பெறுகின்றது. இதன் வீடியோ திறன் 1080p/30fps வரை அமைகின்றது F/2.2 பெரிய வில்லை கொண்ட அதன் 13 MP உடனான பெரிய பரப்புக்கான உணரியானது, புகைப்படங்களை தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கும் வகையில் ஒளியை கட்டுப்படுத்துகிறது. C21Y இன் 4 மடக்கு உருப்பெருக்கம், பயனர்களுக்கு நீண்ட தூர காட்சிகளை படமாக்க உதவுகிறது. C21Y லென்ஸ் தொகுதியில் கறுப்பு – வெள்ளை புகைப்பட காட்சிகளுக்கு B&W லென்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. Retro லென்ஸ் மற்றும் B&W லென்ஸ் மூலம் இரண்டு வகையான விசேட கலையாற்றல் கொண்ட போர்ட்ரேட் புகைப்படங்களை எடுக்க முடியும்.  Portrait mode இல் வெளிப்பாடு, நிறத்தின் வெப்பநிலை, சாயல் (exposure, color temperature, hue) உள்ளிட்ட ஏனைய அளவுருக்களை மீண்டும் சரிசெய்யலாம். மாஸ்டர் போர்ட்ரெய்ட் ஆனது, உருவகப்படுத்துதலுடன், இறுதி போர்ட்ரைட்-பாணி புகைப்படங்களுடன் அமைப்பைச் சேர்ப்பதன் மூலம் புகைப்படங்களுக்கு Retro film (இடைக்கால திரைப்பட) பாணி இணைக்கப்படுகின்றன. C21Y மெக்ரோ லென்ஸ் ஆனது, “super close” (மிக அண்மித்த) குவியத்தை உருவாக்கி, பொருட்களை மிக அருகில் கொண்டு வருகிறது. மெக்ரோ புகைப்பட உருவாக்கத்தில், மிக அதிக விபரங்களை படம்பிடிக்க பயனருக்கு இது உதவியளிக்கிறது. அத்துடன் மைக்ரோ உலகின் அழகை அற்புதமான விபரங்களுடன் ஆராயவும் அது வழியமைக்கிறது.

எடையாக 190 கிராம் மட்டுமே கொண்டுள்ள realme C21Y ஆனது, கறுப்பு, நீலம் (Cross Black, Cross Blue) ஆகிய வண்ணங்களில் வருகிறது. 5,000 mAh மின்கலத்தை கொண்டுள்ள இது, நாளாந்தம் பல்வேறு வகைப்பட்ட பணிகளுக்கு ஏற்ற வகையிலான சக்தியை வழங்கப் போதுமானதாக அமைநக்துள்ளது.

realme பற்றி:

realme என்பது ஒரு தொழில்நுட்ப தரக்குறியீடாகும். இது முன்னணி தரம் மற்றும் காலத்திற்கு ஏற்ற நவீனத்துவமான ஸ்மார்ட்போன்களாகும் என்பதுடன் அது AIoT தயாரிப்புகளை உலக சந்தைக்கு வழங்குகிறது. realme பயனர்கள், இளமை மற்றும் உலக அளவிலான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். realme தயாரிப்புகள் யாவும், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைப் பயன்படுத்தி இளைஞர்களை ‘துள்ளுவதற்கு துணிய’ வழி வகுக்கின்றன. realme உலகின் 7ஆவது சிறந்த ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக விளங்குவதோடு, 2020 இன் 3ஆவது காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகளின் Counterpoint புள்ளி விபரங்களின்படி பிரதான ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், realme இனது உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 25 மில்லியனை எட்டி, அது வருடத்திற்கு வருட (YoY) வளர்ச்சி 808%  விகிதத்தை அடைந்ததன் மூலம், 2019 இலிருந்து 2020 இரண்டாம் காலாண்டு வரை தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 70 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

# நிறைவு #

Share

You may also like...