உள்நாட்டு நீர் வழங்கல் திட்ட வணிகத்தை பலப்படுத்துவதுடன் வெளிநாட்டு விரிவாக்கத்தையும் இலக்கு வைத்துள்ள DIMO
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சமூகங்களுக்கும் குழாய் மூலமான சுத்தமான தண்ணீருக்கான அணுகலை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியுடன் இணைந்து தனது நீர் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை உள்நாட்டில் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO மேலும் பலப்படுத்தியுள்ளது. உள்நாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் அதே நேரத்தில், அதன் நீர் வழங்கல் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்ட வணிகத்தை வெளிநாட்டு சந்தைக்கு விரிவுபடுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் 50% க்கும் அதிகமானவர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுவதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வெளியிட்ட நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு துறைக்கான விரிவான முதலீடு மற்றும் முதன்மைத் திட்டம் குறிப்பிடுகின்றது. இந்த தேசிய திட்டத்தின் பிரகாரம், நாட்டில் மீதமுள்ள மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள், குழாய் மூலம் நீருக்கான அணுகலை பெறுவதன் மூலம் பயனடைவார்கள். இந்த துறையில் அதன் விரிவான அனுபவத்தையும், அதன் அதிகரித்து வரும் வெற்றிகரமான நீர் வழங்கல் திட்டங்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி நோக்கங்களை அடைய உதவும் வகையில் எந்தவொரு அளவிலான நீர் திட்டங்களையும் மேற்கொள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று DIMO நம்புகிறது.
பல தசாப்தங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் இருந்து KSB pumps இன் உள்ளூர் விநியோகத்தை முன்னெடுக்க DIMO தெரிவு செய்யப்பட்டதுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) இற்கான அதிநவீன நீர் விநியோக திட்டங்களை செயற்படுத்துவதில் நீண்டகால ஒப்பந்தக்காரராக விரிவடைந்துள்ளது.
இன்று, இந்த நிறுவனம் மிகவும் நம்பகமான ஒப்பந்தக்காரராக மாறியுள்ளது. இது நீர் பரிமாற்றம், நீர் சுத்திகரிப்பு, நீர் விநியோகம், ஒட்டோமேஷன் மற்றும் பல துறைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த பங்களிப்பதன் மூலம் NWSDB இற்கு ஆயத்த தயாரிப்பு அடிப்படையில் அனைத்து நீர் வழங்கல் திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்துகிறது. நீர் வழங்கல் திட்டங்கள் சக்தி நுகர்வு அதிகமான திட்டங்கள் என்று பரவலாக அறியப்படுகின்றன, எனவே, குறைந்த சக்தி நுகர்வு மூலம் விரும்பிய முடிவைப் பெற சிறந்த ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பத்தை வழங்க KSB போன்ற நிறுவனங்களுடன் இணைந்து DIMO அதன் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த நீர் வழங்கல் திட்டங்களின் நீண்டகால நடவடிக்கைகளின் போது எரிசக்தி பயன்பாட்டின் அடிப்படையில் இது குறிப்பிடத்தக்க சேமிப்பை ஏற்படுத்தியுள்ளதன் மூலம் தேசத்தின் நிதிச் சுமையைக் குறைத்துள்ளது. NWSDB இன் அண்மைய மற்றும் மிகப்பெரிய சக்தி பாதுகாப்பு திட்டமான அம்பத்தளை Energy Conservation திட்டம், இதுபோன்ற புரட்சிகர முயற்சிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இது தொடர்பில் DIMOவின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளரான ரஞ்சித் பண்டிதகே குறிப்பிடுகையில், “நீர் வழங்கல் திட்டங்களில் எங்கள் அனுபவம் வளர்ச்சியடைந்தவுடன், இந்த களத்தில் உள்ள பிற பகுதிகளுக்கும் நாங்கள் விரிவாக்கமடைந்தோம். DIMO நிறுவனமானது நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (CIDA) இனால் ஒரு C2 (Civil Scope இற்கான) ஆகவும் மற்றும் நீர் வழங்கல் திட்டங்களுக்கான EM-1 (Electromechanical) தரப்படுத்தப்பட்ட ஒப்பந்தக்காரராக அங்கீகாரம் பெற்றது. இதன் மூலம் இந் நிறுவனம் இலங்கையில் ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டங்களை மேற்கொள்ள தகுதியான ஒப்பந்தக்காரராக தகுதி பெறுகின்றது. புகழ்பெற்ற மற்றும் நம்பகமான ஒப்பந்தக்காரராக எங்கள் நிலையை மேலும் உயர்த்துவதற்காக, இலங்கையில் நீர் திட்டங்களுக்கான CS1 தர ஒப்பந்தக்காரராக CIDA அங்கீகாரத்தைப் பெறுவதை DIMO நோக்கமாகக் கொண்டுள்ள அதே நேரத்தில் அதன் நீண்டகால குறிக்கோள் நீர் வழங்கல் திட்டங்களில் Engineering Procurement and Construction (EPC) ஒப்பந்தக்காரராக 2024 க்குள் ஆகுவதாகும்,”என்றார்.
ஒருபண்டிவெவ, கலிகமுவ, கிளிநொச்சி, நிகாவெவ, புளத்கோஹுபிட்டி, ஹங்கிலிஹெல்ல மற்றும் மஸ்கெலியா ஆகிய இடங்களில் Water Supply and Sanitation Improved திட்டம் (WASSIP) செயல்படுத்திய பல கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களை செயல்படுத்துவதில் DIMO ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டங்கள் சிரமமின்றி இயங்குவதை உறுதி செய்வதற்காக DIMO இந்த திட்டங்களை நிறைவு செய்து ஒப்படைப்பதில் ஒரு படி மேலே சென்று பணியாற்றுகின்றது. DIMO சேவைக் குழு நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்த திட்டங்களின் எந்தவொரு கோளாறு, காலமுறை பராமரிப்பு மற்றும் சேவைகளுக்கு ஆதரவளித்து வருகிறது.
இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை செயல்படுத்தும்போது பூர்த்தி செய்ய வேண்டிய பல அளவுகோல்கள் உள்ளன. தகுதிகள் மற்றும் தராதரங்களை பூர்த்தி செய்தல், சரியான மனித வள திறன்களின் கிடைக்கும் தன்மை, தேவையான விநியோகஸ்தர்களுக்கான அணுகல், நம்பகமான விநியோகச் சங்கிலி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவை முக்கிய அம்சங்களில் அடங்கும். இந்த கூறுகள் பூர்த்தி செய்யப்படுவதால், DIMO தகுதி வாய்ந்தது மற்றும் இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை வெற்றிகரமாக கையாளும் திறன் கொண்டது.
சர்வதேச அரங்கில், DIMO ஏற்கனவே மியான்மர் மற்றும் மாலைத்தீவில் நீர் வழங்கல் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளதுடன், இந்த நாடுகளில் அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்த உள்ளது. திட்டங்களில் எதிர்பார்க்கப்படும் எழுச்சிக்குத் தயாராவதற்கு, DIMO தேவையான நிறுவன நற்சான்றிதழ்களைப் பெற்று மனிதவள திறன்களை வளர்த்துக் கொள்கிறது. இதனால் இலங்கைக்கு வெளியே எந்தவொரு நீர் வழங்கல் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தையும் மேற்கொள்வது நல்ல நிலையில் உள்ளது.
பட விளக்கம்
DIMO வினால் இலங்கையில் செயற்படுத்தப்பட்ட நீர் வழங்கல் திட்டங்களில் சில.
Recent Comments