புதிய சேவை நிலையங்கள் மூலம் தனது எல்லையை விரிவுபடுத்தும் CLC Islamic Finance
உள்நாட்டு மற்றும் தெற்காசிய பிராந்திய மட்டத்தில் விருது வெல்லும் நிறுவனமாக தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டு வரும் Commercial Leasing and Finance இன் இஸ்லாமிய வங்கியியல் பிரிவான CLC Islamic Finance, ‘Dedicated Islamic Finance Super Dealer Points (SDPs)’ என்றழைக்கப்படும் 06 புதிய அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை நிலையங்களுடன் தனது நாடளாவிய வாடிக்கையாளர் சென்றடைவு முயற்சியை முன்னெடுத்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள SDPகள் வாடிக்கையாளர்களின் இஸ்லாமிய நிதித் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் நோக்கில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்குவதற்கு கிளைகளைக் கொண்டிராத பிரதேசங்களில் SDPகள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புறும் மையங்களாகச் செயற்படும்.
இந்த புதிய அர்ப்பணிக்கப்பட்ட இஸ்லாமிய நிதிச் சேவை நிலையங்கள் கட்டுவன்வில (பொலன்நறுவை மாவட்டம்), மதுரங்குளி (புத்தளம் மாவட்டம்) மற்றும் மடவளை (கண்டி மாவட்டம்) ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன. இதற்கும் மேலதிகமாக CLC Islamic Finance, அக்கரப்பத்து (அம்பாறை), ஓட்டமாவடி (மட்டக்களப்பு), கிண்ணியா மற்றும் மூதூர் (திருகோணமலை) ஆகிய பிரதேசங்களிலும் 4 மேலதிக SDPகளை அமைத்துள்ளது.
“Super Dealer Points இன் இணைப்பானது எங்கள் கிளை வலையமைப்பை மேலும் பலப்படுத்துவதுடன், குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளை குறிவைத்து, எங்கள் பரந்த அளவிலான தயாரிப்புகளுடன் அக்கரைப்பற்று வலுவூட்ட எம்மை இயலுமைப்படுத்துகின்றது. இதுவரை சென்றடையாத பிராந்தியங்களைச் சென்றடைந்து, இஸ்லாமிய நிதியியல் வாடிக்கையாளர்களுக்கு அவர்களை மையமாகக் கொண்ட, இலாபகரமான தீர்வுகளை அறிமுகப்படுத்தும் எமது விரிவுபடுத்தல் திட்டத்தின் அங்கமே SDPகள் ஆகும். SDP எண்ணக்கருவை மேலும் கட்டமைக்கவும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர் தளத்திற்கு சிறப்பாக சேவை செய்யவும் மேலும் SDP மையங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம்” என CLC இஸ்லாமிக் ஃபினான்ஸின் தலைவர், இல்ஸாம் அவ்பர் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் தெற்காசியாவில் முன்னணி இஸ்லாமிய நிதி தீர்வு வழங்குநரான CLC Islamic Finance புதுமையான மற்றும் நெறிமுறையான இஸ்லாமிய வங்கி தீர்வுகளுக்கான இல்லமாகும். இலாப பங்கீடு முதலீடுகள் (முதாரபாஹ்), தவணை முதலீடுகள் (வகாலா), இஸ்லாமிய குத்தகை (இஜாராஹ்), வர்த்தக நிதி (முராபஹா), சொத்து/ செயற்படு முதலீட்டு நிதி (குறைந்து வரும் முஷாரகா), இறக்குமதி நிதி (முஸவ்வமாஹ்), மற்றும் செயற்படு மூலதன நிதி (வகாலா) போன்ற பல நிதிச் சேவைகளை இது வழங்குகின்றது.
Commercial Leasing and Finance (CLC) நிறுவனத்தின் இஸ்லாமிய வணிகப் பிரிவானது 2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஒழுங்குபடுத்தல் உரிமத்துடன், Commercial Leasing மற்றும் Finance PLC கீழ் இஸ்லாமிய நிதி அலகாக ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியிடமிருந்து பெற்ற சிறப்பு சான்றிதழைத் தவிர, CLC Islamic Finance, Ash-Shaikh Shafique Jakhura (தலைவர்) , Ash-Shaikh Murshid Mulaffer (உறுப்பினர்) மற்றும் Ash-Shaikh Fazil Farook (உறுப்பினர்) ஆகிய 3 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பட்டறைகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களை நடத்துவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இஸ்லாமிய நிதி தயாரிப்புகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இஸ்லாமிய நிதி சந்தைப்படுத்துனர்களாக 30 க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற நிபுணர்களை இது ஏற்கனவே நியமித்துள்ளது.
CLC Islamic Finance நிறுவனமானது இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது. இது மாற்று நிதித் தீர்வுகளை செயல்படுத்த வணிக குத்தகை மற்றும் நிதி ஒழுங்குபடுத்தல் உரிமத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு பிரத்தியேக வணிக அலகு ஆகும். அதன் ஐந்தாண்டு கால செயற்பாட்டில் CLC Islamic Finance, நாட்டில் இஸ்லாமிய நிதி வழங்கும் முதல் ஐந்து நிறுவனங்களுக்குள் இடம் பிடித்துள்ளதுடன், பல விருதுகளையும் வென்றுள்ளது. இந்நிறுவனத்தின் ஐந்தொகையானது ரூ. 4 பில்லியன் சொத்துக்கள் மற்றும் முதாரபாஹ் மற்றும் வகாலா முதலீடுகள் வடிவில் பொது முதலீடுகளாக ரூ. 2 பில்லியனைக் கொண்டுள்ளது. CLC Islamic Finance தற்போது இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் தொழில்துறையில் அதிக லாபம் வழங்குபவராக உள்ளதுடன், இது தொழில்துறையில் மிகக் குறைந்த NPL விகிதங்களைக் கொண்ட தரமான சொத்துக்களைக் கொண்டுள்ளது.
இஸ்லாமிய வங்கி தீர்வுகள் பற்றிய மேலதிக தகவல்களை www.clc.lk இல் பெற்றுக் கொள்ள முடிவதுடன், வாடிக்கையாளர்கள் [email protected] வழியாக எந்தவொரு விசாரணைகளுக்கும் CLC Islamic Finance உடன் தொடர்பு கொள்ளலாம்.
Recent Comments