முச்சக்கர வண்டி உரிமையாளர்களை கொவிட் தொற்றிலிருந்து மீட்க கொமர்ஷல் லீசிங் மூலம் விசேட பாதுகாப்பு பிரிப்பான்

விழிப்பூட்டல் திட்டமும் முன்னெடுப்பு

தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் நம்பகமான நிதிச் சேவை வழங்குநரான கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் (CLC), கொவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து, இலங்கை மக்களின் நலனின் பொருட்டு, புதிய சமூக நலன் கொண்ட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த வகையில், நாடு முழுவதுமுள்ள தங்களது நிறுவனத்தின் வாடிக்கையளர்களான, முச்சக்கர வண்டி உரிமையாளர்களைப் பாதுகாக்கும் வகையில், முச்சக்கர வண்டிகளுக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு பிரிப்பான்களை (separators) அது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கவசங்களை வழங்கும் நிகழ்வு, களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள வைத்திய கூடத்தில் இடம்பெற்றதோடு, முறையான சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொலிஸாரின் உதவியுடன் அது இடம்பெற்றது.

இதற்கு முன்னர் எந்தவொரு நிதி நிறுவனமோ அல்லது நிறுவனமோ மேற்கொள்ளாத வகையிலான மிகப் பெரும் பொறுப்பு வாய்ந்த நடவடிக்கையான இத்திட்டமானது, முச்சக்கர வண்டியில் மேற்கொள்ளப்பட வேண்டிய, காலத்திற்கேற்ற மாற்றம் எனக் கூறலாம். முச்சக்கர வண்டியின் சாரதிக்கும் பயணிகளுக்கும் இடையிலான இடத்தை வேறாக பிரிக்கும் இப்புதிய பிரிப்பான்கள் (separators) வைரஸின் பரவலை தடுக்கும் ஒரு தடையாக செயல்படுகின்றன.

தடிப்பமான பொலித்தீனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இப்பிரிப்பான்கள் ஊடாக வைரஸ் பரவலுக்கு எவ்வித வாய்ப்புகளும் இல்லை என்பதால், இது நாடு முழுவதுமுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு அறிமுகப்படுத்தக் கூடிய மிகப் பாதுகாப்பான மாற்று வழிகளில் ஒன்றாகும்.

கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் நிறுவனத்தின் விற்பனை தொடர்பாடல் முகாமையாளர், பிரசாத் பெரேரா இது தொடர்பில் தெரிவிக்கையில், “கொவிட் அச்சுறுத்தல் காணப்படும் இக்காலகட்டத்தில், நாடு முழுவதிலுமுள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயும்போது, எங்கள் கவனத்திற்கு எட்டிய ஒரு விடயமே, முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பயணிகள் ஆகிய இரு பிரிவினரையும் இத்தொற்றிலிருந்து பாதுகாக்க, இதுபோன்ற ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அத்தியவசியமாகும் என உணர்ந்தோம். நாளாந்த வருமானத்தில் வாழும் முச்சக்கர வண்டி சாரதிகளால், வைரஸ் தொற்றுக்கு மத்தியில் வேலையின்றி இருக்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதே நேரத்தில், இவ்வாறான தொற்று சூழ்நிலையில், பயணிகளை முச்சக்கர வண்டிகளில் கொண்டு செல்வதும் அவர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதற்கமைய, சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிஸாருடன் கலந்தாலோசித்து, எமது முச்சக்கர வண்டி வாடிக்கையாளர்கள் மற்றும் பயணிகள் ஆகிய இரு பிரிவினரையும், அவர்களது பயணம் முடியும் வரை, இத்தொற்று நிலையிலிருந்து பாதுகாக்க ஒரு தீர்வை அறிமுகப்படுத்த எம்மால் முடிந்துள்ளது.” என்றார்.

தற்போது வரை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொவிட்-19 தொற்று மிக மோசகமாகப் பரவி வருகின்றது. அதில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்களில் முச்சக்கர வண்டி சாரதிகளும் முன்னிலையில் காணப்படுகின்றது. பெரும்பாலானோர் தங்கள் போக்குவரத்து வாகனமாக முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவதும் அதற்கு ஒரு காரணமாக காணப்படுகின்றது. தற்போது, கொவிட் நோயாளிகளில் பெரும்பாலானோர் சமூகத்தில் அடையாளம் காணப்படுகின்றமையால், முச்சக்கர வண்டியில் பயணிப்பது கூட ஒரு ஆபத்தான நடவடிக்கையாக அமைந்துள்ளது. ஏனெனில், உரிய முறையில் மூடப்படாத முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது, பயணியிடமிருந்து சாரதிக்கு அல்லது சாரதியிடமிருந்து பயணிக்கு கொவிட்-19 தொற்றுநோய் பரவ அதிக வாய்ப்பு காணப்படுவதே அதற்கான காரணமாகும். அத்தகைய கவசமிடப்பட்ட முச்சக்கர வண்டிகளை பயன்படுத்தி தங்களின் நாளாந்த பயணங்களை மேற்கொள்வதன் மூலம் பயணத்தின் நடுவில் இவ்வாறு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதால்,. அதன் மூலம், பயணிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது. அத்தகைய பாதுகாப்பு பிரிப்பான் கொண்ட ஒரு முச்சக்கர வண்டியில், எவ்வித பயமோ, சந்தேகமோ இன்றி பயணிகள் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடிகின்றமையானது, பயணிகளுக்கும் மிகப் பெரும் ஆறுதலாக அமையும்.

கொவிட் தொற்றின் முதலாம் அலையைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி சாரதிகளை அதிலிருந்து பாதுகாக்க, CLC நிறுவனமானது, கடந்த மார்ச் மாதம் இவ்வாறான 12,000 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பிரிப்பான்களை தயாரித்து, அதன் 68 கிளைகள் மூலம் முச்சக்கர வண்டி குத்தகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வைத்தது. கொவிட் பரவல் இரண்டாம் அலையைத் தொடர்ந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து இந்நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்த கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் நிறுவனம், முச்சக்கர வண்டி வாடிக்கையாளர்களை வைரஸிலிருந்து பாதுகாக்கும் வகையில், முகக் கவசங்கள், கிருமி கொல்லித் திரவம் மற்றும் வாடிக்கையாளர்களின் விபரங்களை பதிவு செய்யும் வகையிலான குறிப்புப் புத்தகம் அடங்கிய சுகாதார பாதுகாப்பு தொகுதியொன்றையும் தனது கிளை வலையமைப்பின் மூலம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

தனது வாடிக்கையாளர்களின் நலனில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வரும் கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால நெருங்கிய உறவைப் பேணியும் வருவதுடன், எப்போதும் அவர்களை நோக்காகக் கொண்ட, இவ்வாறான காலத்திற்கு அவசியமான அர்த்தமுள்ள பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.. முச்சக்கர வண்டிகளை தனது நாளாந்த போக்குவரத்து ஊடகமாக பயன்படுத்தி வரும் பயணிகளையும், கொவிட்-19 அபாயத்திலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, இத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் அது செயற்படுத்தி வருகின்றது.

Share

You may also like...