Singer இற்கு SLIM Restart Resilience Awards 2020 இல் தங்க விருது
நாட்டின் முன்னணி நீடித்த நுகர்வோர் சில்லறை விற்பனையாளரான சிங்கர், அண்மையில் இடம்பெற்ற SLIM Restart Resilience Awards 2020 இல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதற்தர நீடித்த நுகர்வோர் வழங்குநர் எனும் அதன் நாமத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், Restart Resilience Large Organization பிரிவின் கீழ் தங்க விருதை சிங்கர் பெற்றுக் கொண்டுள்ளது. இவ்விருதானது, COVID-19 தொற்றின் போது சந்தையில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வான நிலைகளிலிருந்து சிங்கர் நிறுவனம் மீண்டு வந்தமை மற்றும் 2020 ஆம் ஆண்டு முழுவதும் நிலையான செயல்திறனைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், சந்தைப்படுத்தல் புதுமைகள் மற்றும் செயல்பாட்டுத் திறன்களுடன் புதிய சவால்களுக்கு நிறுவனம் எவ்வாறு தன்னிசைவடைந்து கொண்டது என்பதற்கு ஒரு சான்றாகும்.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஏற்பாடு செய்திருந்த SLIM Restart Resilience Awards 2020 (மீள் தொடக்கம் மீண்டெழுதல் விருதுகள் 2020) விருதுகள் நிகழ்வானது, இலங்கையின் மீள் தொடக்கத்திற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்பதோடு, இது வணிக நிறுவனங்களுக்குத் தேவையான உத்வேகத்தை வழங்குவதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ள ஒன்றாகும். இவ்விருதானது, நிறுவனங்களின் சந்தைப்படுத்தலுக்கான புதிய முயற்சிகள், தன்னிசைவாக்கம், தொற்றுநோய் நிலைமையின் போதான சவால்களை சமாளிப்பதற்கான விடாமுயற்சி உள்ளிட்ட நிறுவனங்களின் சிறந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையிலான வெகுமதியாக அமைந்துள்ளது.
குறித்த கௌரவிப்பு தொடர்பில் சிங்கர் ஶ்ரீ லங்கா பி.எல்.சி. குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன தெரிவிக்கையில், “நாம் தற்போது இசைவடைந்துள்ள வலயத்துக்கு அப்பால் செல்வதற்கும், கொவிட்-19 இன் தாக்கத்தை சமாளித்து மிகச் சிறந்த வகையில் மீண்டு எழுச்சி பெறுதற்குமாக, இந்த குறிப்பிட்ட விருது எமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எமக்கு எமது அர்ப்பணிப்புள்ள தனித்தனி நபர்களால் ஒன்றிணைந்த எங்கள் குழு மீது நம்பிக்கை இருந்தது. அவர்கள் மிகச் சரியான நேரத்தில் தங்கள் முயற்சிகளை வழங்கியுள்ளனர். எமது அணி ஒன்றாக அணிவகுத்துச் சென்றதனாலேயே அன்றி இந்த விருதை எம்மால் அடைந்திருக்க முடியாது. இந்த விருதை, எமது முழு அணிக்கும், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும், எங்களுக்கு ஆதரவளித்த பங்குதாரர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். ” என்றார்
சிங்கர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர், ஷனில் பெரேரா தெரிவிக்கையில், “தொற்றுநோய் நிலைமையின் போது எமது சிறந்த நகர்வின் மூலமான கண்ணோட்டத்திற்காக, SLIM இடமிருந்து இந்த மதிப்புமிக்க விருதை வென்றமைக்கு நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். புதுமை மிகு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரங்கள் மூலமாகவும், எமது முழுமைப்படுத்தப்பட்ட Singer.lk இணையத்தளம் மூலமாகவும் நாம் எமது வாடிக்கையாளர்களை சென்றடைவதை உறுதிசெய்தோம். நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் வழங்கிய அதே நேரத்தில், அதனுடன் இணைந்தவாறு எமது ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தோம். இத்தொற்றுநோய் நிலைமைகளின் கீழ், பாதுகாப்பை முதன்மையாகக் கொண்ட எமது விநியோக சேவைகள், பிரத்தியேகமான விற்பனைக்கு பின்னரான சேவைகள் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வாடிக்கையாளர்கள் எங்களை மன நிறைவோடு பாராட்டினர்.’’ என கூறினார்.
இத்தொற்றுநோய் நிலைமையானது, அனைத்து மட்டங்களிலும் உள்ள நிறுவனங்களிலும் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தியது. ஏறக்குறைய அனைத்து வணிகங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் தொடர்பு, கொள்வனவு நடத்தை மாற்றங்கள், விநியோகச் சங்கிலி இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இத்தாக்கம் காணப்படுகின்றது. பல நிறுவனங்களால் இந்த சவால்களை சமாளிப்பது கடினமாக இருந்தது. ஆயினும், சிங்கர் நிறுவனம் விரைவாக COVID நிலைமைகளுக்கு இசைந்து செல்லும் நெகிழ்திறனான முயற்சிகளை மேற்கொண்டு, தொற்றுநோய் நிலைமையிலும் தடையற்ற சேவையை உறுதி செய்தது.
சிங்கர் ஶ்ரீ லங்கா பி.எல்.சி ஆனது, இலங்கையின் நீடித்த நுகர்வோர் சந்தையில் முன்னணியில் உள்ளதுடன், நாடளாவிய ரீதியில் நாளாந்தம் வளர்ந்து வரும் அதன் வாடிக்கையாளர்களுக்காக, பரந்த அளவிலான உயர்தர உள்ளூர் மற்றும் பிரபல்யமான சர்வதேச வர்த்தக நாமங்களைக் கொண்ட பொருட்களை வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகின்றது. 430 இற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள், வலுவான முகவர் வலையமைப்பு மற்றும் இணைய வர்த்தகத் தளம் (www.singer.lk) ஆகியவற்றைக் கொண்ட சிங்கர் நிறுவனம், 600 இற்கும் மேற்பட்ட இலத்திரனியல் பொருட்கள், 1,200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 இற்கும் மேற்பட்ட சர்வதேச புகழ்வாய்ந்த வர்த்தக நாமங்களுடனான பொருட்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
படம்:
சிங்கர் நிறுவன குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி, மஹேஷ் விஜேவர்தன, SLIM Restart Resilience தங்க விருதை பெற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட படம்.
Recent Comments