கேரகல ரஜ மஹா விகாரையை தொடர்ச்சியாக 7ஆவது ஆண்டாகவும் ஒளியூட்டும் சுவதேசி கொஹம்ப

இலங்கையின்  மூலிகை பராமரிப்பு தயாரிப்புகளுக்கான சந்தையில் முன்னோடியும், முன்னணி நிறுவனமுமான சுவதேசி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, தனது சமூக ஆதரவு முயற்சியின் ஓர் அங்கமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேரகல ரஜ மஹா விகாரையின் “ஆலோக பூஜை” இற்கு அண்மையில் அனுசரணை வழங்கியது. துருது பௌர்ணமி போயா தினத்தன்று தொடர்ச்சியான  7ஆவது  ஆண்டாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘சுவதேசி கொஹம்ப ஆலோக பூஜா சத்காரய”, சுவதேசியின் தலைமை அதிகாரியான அமாரி விஜேவர்தனவின் எண்ணக்கருவில் உதித்ததாகும். 

கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள கேரகல ரஜ மஹா விஹாரை, 13 ஆம் நூற்றாண்டில் விஜயபாகு அரசரின் தம்பதெனிய ராஜதானி காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. ´பத்மாவதி பிரிவெனை´ கேரகல ரஜ மஹா விஹாரையில் 15 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஆறாம் பராக்கிரமபாகு அரசரின் காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

ஆலோக பூஜை முன்னெடுப்பு தொடர்பில் தனது கருத்தை தெரிவித்த சுவதேசியின் தலைமை அதிகாரி அமரி விஜேவர்தன, “பாரம்பரிய பெறுமானங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை நிலைநிறுத்தும் இலங்கை நிறுவனமான சுவதேசி, வருடாந்த ஆலோகா பூஜா போன்ற முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம் இலங்கையின் கலாசாரம் மற்றும் புராதன பாரம்பரியத்தை பாதுகாப்பதாக கருதுகிறது. ஒரு சமூக பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில், இந்த முயற்சிகளுக்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதன் மூலம் அடுத்த தலைமுறையினர் பின்பற்றுவதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியை ஏற்படுத்துகின்றோம்,” என்றார்.

ஆலோக பூஜையுடன், கேரகல ரஜ மஹா விகாரையின் தேவைகளையும் கேட்டறிவதை உறுதி செய்ததுடன்,  நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு ஆதரவளிப்பதை ஒரு பொறுப்பாக கருதி தேவையான தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளையும் வழங்கியது.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சுவதேசி கொஹம்ப நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களை வழிபடுவோரின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் ஒளிரச் செய்கிறது. மேலும், நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு கற்பிக்கும் நோக்கத்துடனும் முன்னெடுக்கின்றது,” எனக் குறிப்பிட்டார்.

அமரி விஜேவர்தன, நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்றார். 2013 ஆம் ஆண்டில் வரலாற்று சிறப்பு மிக்க தம்பதெனிய ரஜ மஹா விகாரையின் தலதா மாளிகையும் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எச்சங்களும் அவற்றின் பழைய நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு சுவதேசி நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான அமரி விஜேவர்தன அவர்களால் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருந்தன. அமரி விஜேவர்தன, 1927ஆம் ஆண்டு களனி விஹாரையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்திருந்த ஹெலெனா விஜேவர்த்தன லமாதெனியின் பூட்டப்பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கதிர்காமம் கிரிவிஹாரை, றுகுணு கதிர்காம ஆலயம் (முருகன்), சபரகமுவ மஹா சமன் ஆலயம், தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு மஹா ஆலயம் (விஷ்ணு தெய்வம்), அலுத்நுவர ஸ்ரீ தடிமுன்ட மஹா தேவாலயம்,  கண்டி ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயம், ரெதிகம ரிதி விகாரை, லங்காதிலக ரஜ மஹா விகாரை மற்றும் தம்பதெனிய ரஜ மஹா விகாரை ஆகிய வழிப்பாட்டுத் தலங்களின் ஆலோக பூஜைகளுக்கு  சுவதேசி கொஹம்ப தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்றது.

80 ஆண்டுகால நம்பிக்கையுடன் கூடிய ஒரு உள்நாட்டு நிறுவனமாக, சுவதேசி கொஹம்ப அனைத்து இலங்கையர்களின் நலனுக்காகவும் சமுதாயக் கட்டமைப்பு முயற்சிகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது. இயற்கை அன்னை மீதான மிகுந்த அக்கறையுடன் நிலைபேண் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் கலாச்சார விழுமியங்களை மேம்படுத்துவதற்கும் சுவதேசி கொஹம்ப வர்த்தகநாமம் தன்னை அர்ப்பணித்துள்ளது.

கொவிட் 19 தொற்றுநோய் காலப்பகுதியில், வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் மற்றும் புகையிரத நிலையங்களுக்கு கைகழுவும் தொட்டிகளை வழங்கியமை, குழந்தைகளுக்கான கை கழுவும் படிமுறைகளைக் காட்டும்  காணொளி மூலம் சமூகத்திற்கான விழிப்புணர்வை வழங்குதல், கொஹம்ப மரம் நடுகை பிரசாரம், இலங்கையின் வரண்ட வலயத்தைச் சேர்ந்த சமூகங்களுக்கு நீர் தாங்கிகளை வழங்கிதல், கர்ப்பவதியான தாய்மாருக்கு கொஹம்ப பேபி பராமரிப்பு பரிசுப்பொருட்களை வழங்குதல், விரைவாக மறைந்து வரும் நல்ல பெறுமானங்களை முன்னிலைப்படுத்தும் “நல்ல பழக்கவழக்கம்” புத்தகத்தின் மூலம் பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டல் போன்ற பல சமூக மேம்பாட்டு முயற்சிகளை இந்நிறுவனம் முன்னெடுத்திருந்தது.

இலங்கையில் மூலிகை சவக்கார  தயாரிப்பின் முன்னோடியான, Swadeshi Industrial Works PLC, 1941 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. Swadeshi இன் முதற்தர வர்த்தகநாமங்களில் Khomba Herbal, Rani Sandalwood, Khomba Baby, Perlwite, Little Princess, Lak Bar, Safeplus, Black Eagle Perfume மற்றும் Swadeshi Shower Gel வரிசை ஆகியன அடங்குகின்றன.  சுவதேசி தயாரிக்கும் அனைத்து பொருட்களும் 100% விலங்கு சேர்மானங்கள் அற்றவை, விலங்குகள் மீது எவ்வித துன்புறுத்தலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் விலங்குகள் மீது பரிசோதிக்கப்படவில்லை. இந் நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தை கருத்தில் கொண்டு, அதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது. அனைத்து சுவதேசி தயாரிப்புகளும் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டதென்பதுடன், சான்றளிக்கப்பட்டது. சுவதேசி  தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனை திரவியங்களும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட International Fragrance Association (IFRA)  இனால் சகல தயாரிப்புக்களுக்கும்  சான்றிதழ் அளிக்கப்பட்டவை என்பதுடன் ISO 9001 – 2015 தரத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிறுவனம் சிறந்த மூலிகை வர்த்தகநாமமான  Khomba Herbal மற்றும் பாரம்பரிய அழகு வர்த்தகநாமமான Rani Sandalwood ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்கிறது. குழந்தையின் சருமத்தை  செழுமைப்படுத்துவதற்காக இயற்கை அவகாடோ எண்ணெயால் செறிவூட்டப்பட்ட ‘Khomba Baby Avocado சவர்க்காரம்’ அண்மையில் அதன் சவர்க்கார வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுவதேசி கொஹம்ப அண்மையில் 50 மில்லிலீற்றர் Khomba Hand Sanitizer இனை NMRA வின் பதிவுடன் அறிமுகப்படுத்தியது. Khomba hand sanitizer, வேம்பு, எலுமிச்சைப்புல் மற்றும் கற்றாழை ஆகியவற்றுடன் கிருமி இல்லாத பாதுகாப்பான கைகளுக்காக வருகின்றது.

Share

You may also like...