ராஜா ஜுவலர்ஸின் Diamond Emporium திறந்து வைப்பு

தங்க உலகின் போட்டியற்ற மன்னனான ராஜா ஜுவலர்ஸ், அதன் புதிய வைர அனுபவ மையத்தை சமீபத்தில் திறந்து வைத்துள்ளது. இதற்குப் ‘டயமண்ட் எம்போரியம்’ (Diamond Emporium) எனும் பொருத்தமான பெயரும் சூட்டப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த நகைகளை உருவாக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கான மதிப்பை வழங்குவதற்குமான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இணையும் இந்த புதிய அம்சமானது, திறமையாக வடிவமைக்கப்பட்ட வைரங்கள் மற்றும் இலங்கையின் பெறுமதியான கற்களின் கவர்ச்சியான வரிசைகளை கொண்டுள்ளது. இந்த டயமண்ட் எம்போரியத்தின் திறப்பு விழாவானது, இத்தொழில்துறையிலுள்ள ஏராளமான வல்லுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் முன்னிலையில் சிறப்பாக இடம்பெற்றது.

ராஜா ஜுவலர்ஸ் அதன் ஆரம்பத்திலிருந்தே, உலகப் புகழ்பெற்ற நகைகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது. இலங்கையின் தனித்துவ அடையாளத்தை உள்ளடக்கியவாறு, தரம் மற்றும் மதிப்பில் அதிக கவனத்துடன் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பயணத்தில், இணையற்ற நிபுணத்துவம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றால் வலுவூட்டப்பட்டு, 95 வருடங்களாக தொழில்துறையில் பெற்ற அனுபவத்தை புடம்போட்டு காண்பிக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த டயமண்ட் எம்போரியம் அமைகின்றது. கொழும்பில் உள்ள ராஜா ஜுவலர்ஸின் பிரதான காட்சியறையில் அமைந்துள்ள இதில், புதிய மேலதிகமான அம்சமாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நகைகளின் தனித்துவமான தொகுப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம். திறமையான உற்பத்திப் பணியாளர்கள் குழுவுடன் இணைந்து பல்வேறு புதிய வடிவமைப்புகளைக் கொண்டுள்ள டயமண்ட் எம்போரியம், வாடிக்கையாளகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு நகைத் தயாரிப்புகளை  அமைத்து, மேம்படுத்தி வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. ராஜா ஜுவலர்ஸின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு, தயாரிப்புகளின் ஒரு குறிப்பிட்ட பட்டியலைக் காண்பிப்பதிலும் பார்க்க, இந்த வைர அனுபவ மையமானது ஒரு தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.

இந்த முக்கியமான நிகழ்வு மற்றும் இப்புதிய முன்னெடுப்பு  தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ராஜா ஜுவலர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அத்துல எலியபுர, “எமது பல வருட நிபுணத்துவம் மற்றும் எமது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மகத்தான பெறுமதியான சேவையை வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம். டயமண்ட் எம்போரியம் ஆனது, எமது தனித்துவமான இலங்கை அடையாளத்தையும், ஒன்பது தசாப்தங்களாக தொழிற்துறையில் உறுதியான வீரனாக நிலைத்து நிற்கும் உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. இந்த புதிய முயற்சி எமக்கும் எமது வாடிக்கையாளர்களுக்கும் இதுவரை கண்டிராத வாய்ப்பை ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

பல தசாப்தங்களாக எண்ணற்ற கொண்டாட்டங்கள், மகிழ்ச்சிகரமான தினங்ககளை தனது தயாரிப்புகள் மூலம் அழகுபடுத்தி, தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் தயாரிப்பு வகைகளுடன், ராஜா ஜுவலர்ஸ் இலங்கையின் நகைத் துறையில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதன் இணையற்ற தரம் மற்றும் பல வருடங்களாக அதன் மீதான நம்பிக்கையின் அத்திவாரத்தின் மூலம், ராஜா ஜுவலர்ஸ் அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு உண்மையான, தனித்துவமான அனுபவத்தை வழங்க எப்போதும் தயாராக உள்ளது.

ராஜா ஜுவலர்ஸ் பேணி வரும் அதன் உயர் தரம் காரணமாக, அதன் பயணம் முழுவதும் பல்வேறு விருதுகளால் அது கௌரவிக்கப்ப்டுள்ளது. அதன் விருதுகள் பட்டியலில் சமீபத்திய இணைப்பாக, National Business Excellence Award 2021 விருது அமைகின்றது. நிறுவனத்தை சிறந்த நகை உற்பத்தியாளராக அங்கீகரித்து, இலங்கையின் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் நான்கு ஜனாதிபதி தங்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. நகை நிறுவனம் எனும் வகையில், மிக உயர் தரமான தரநிலைகள், சிறந்த தங்க நகை உற்பத்தி, மிகவும் அனுபவம் வாய்ந்த வைரம் வெட்டும் திறன் ஆகியவற்றின் மூலம், தங்க உலகின் மன்னன் எனும் ராஜா ஜுவலர்ஸின் நற்பெயரை இவ்விருதுகள் மீண்டும் பறைசாற்றுகின்றன.

End

Share

You may also like...