ஆசியா பசிபிக்கில் டிஜிட்டல் திறமையாளர்களுக்கான இடைவெளியைக் குறைக்க Huawei உடன் கைகோர்க்கிறது ASEAN

Asia Pacific Innovation Day – Digital Talent Summit 2021 (ஆசிய பசிபிக் புத்தாக்க தினம் – டிஜிட்டல் திறமையாளர்களின் உச்சி மாநாடு 2021) இல், ASEAN அறக்கட்டளை மற்றும் Huawei ஆகியன இணைந்து, டிஜிட்டல் திறமையாளர்களுக்கான இடைவெளியைக் குறைப்பதற்கான கூட்டு முயற்சியை உறுதி செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்களை ஒன்றிணைத்த இந்த ஒன்லைன் மூலமான உச்சிமாநாடானது, ஆசிய பசிபிக் வலயத்தில் டிஜிட்டல் திறமையாளர்களை வளர்ப்பதற்கு உதவும் அவர்களின் நிலைபேறான தொகுதியொன்றை உருவாக்குவதற்கு அவசியமான தீர்வுகளையும், சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டது.

ASEAN அமைப்பின், அரசியல் பாதுகாப்பு சமூகத்திற்கான ASEAN பிரதி  பொதுச்செயலாளர் Robert Matheus Michael Tene, ஆசியான் டிஜிட்டல் சிரேஷ்ட உத்தியோகபூர்வ கூட்டத்தின் தலைவர் Dato’ Sri Mohammad Mentek, கம்போடியாவின் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் Dr. Chea Vandeth, இந்தோனேஷியா குடியரசின் ஜனாதிபதி பணிக் குழாமின் தலைவர் ஜெனரல் TNI (Purn) Dr. Moeldoko, இலங்கையின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சீனாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் Jose Santiago L. Sta. Romana மற்றும் தாய்லாந்து உயர்கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பேராசிரியர் Sirirurg Songsivilai, M.D., Ph.D. உள்ளிட்டோரின் முக்கிய உரைகள், ‘ஆசிய பசிபிக் புத்தாக்க கண்டுபிடிப்பு தினம் – டிஜிட்டல் திறமையாளர்கள் உச்சி மாநாடு 2021’ இல் இடம்பெற்றது. இப்பிராந்தியத்தில் டிஜிட்டல் திறமையாளர்களின் தொகுதியொன்றுக்கான உறுதியான அடித்தளத்தை வளர்ப்பதில், முக்கிய பங்குதாரர்களின் ஈடுபாட்டுடனான பங்கேற்பின் முக்கியத்துவத்தை அவர்களது உரைகள் வலியுறுத்தின.

இலங்கையின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ உரையாற்றியபோது, ​​“Huawei போன்ற நிறுவனங்கள், ஏற்கனவே பிராந்தியத்தில் திறமையாளர்களை வளர்ப்பதில் நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் Huawei, மாணவர்களுக்கு மிக கட்டுப்படியான விலையில், குறிப்பாக வசதி வாய்ப்பற்ற வீடுகளில் உள்ள அல்லது கிராமப் புறங்களில் அதிவேக இணைய அணுகலுக்கான டிஜிட்டல் உட்கட்டமைப்பை வழங்கி வருகிறது. அதே நேரத்தில், ICT மாணவர்களை உருவாக்குவதற்காக பல்கலைக்கழகங்களுடன் இணைந்து Huawei செயற்பட்டு வருவதுடன், ICT Application களின் மேம்பாட்டுக்கு தேவையான மென்பொருள் மற்றும் வன்பொருளையும் அது வழங்கி வருகிறது. கூட்டு கண்டுபிடிப்பு மாதிரி அமைப்பானது, 5G, AI, cloud-computing போன்ற தொழில்துறைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதற்கும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் எமது மாணவர்களை ஊக்குவித்துள்ளது.” என்றார்.

“எதிர்காலத்தில், டிஜிட்டல் திறமையாளர்களுக்கு ICT அறிவைக் கொண்டு வரும் புத்தாக்கம் கொண்டவர்களைக் கொண்ட தொகுதியை உருவாக்குவதற்கு Huawei உடன் ஒத்துழைக்க நாம் எதிர்பார்க்கிறோம். அத்துடன் எமது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றியமைத்துக் கொள்வதற்கு, சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கிறோம்” என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டினார்.

Huawei ஆசிய பசிபிக் தலைவர் Jeffery Liu தனது உரையில், “புத்தாக்கமான ICT திறமையாளர்களைக் கொண்ட தொகுதியை விருத்தி செய்வதானது, டிஜிட்டல் மாற்றத்திற்கான அடிப்படையாகும். பகிர்ந்து கொள்ளப்படும் புத்தாக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், வெற்றியுடனான இறுதி விளைவுகளுடன் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு நாம் அழைத்துச் செல்லப்பட, ICT திறமையாளர்ளின் ஆற்றலைப் பயன்படுத்தலாம். எமது பங்காளர்களுடன் இணைந்து, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 500,000 டிஜிட்டல் திறமையாளர்களை உருவாக்கும் பொருட்டு, எதிர்வரும் 5 வருடங்களில் 50 மில்லியன் டொலர்களை Huawei முதலீடு செய்யும்,” என்றார்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் டிஜிட்டல் திறமையாளர்களுக்கான இடைவெளியைக் குறைப்பதற்கான பாலத்தை அமைப்பது தொடர்பில் ASEAN அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. குறிப்பாக, ASEAN அறக்கட்டளைக்கும் Huawei ASEAN Academy இற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இவ்விழாவில் அது மேலும் வலுப்பெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் திறன் பயிற்சியை வழங்கி வரும் Huawei இன் உலகளாவிய பெரு நிறுவன சமூகப் பொறுப்பின் (CSR) முக்கிய முயற்சியான, ‘Seeds for the Future’ (எதிர்காலத்திற்கான விதைகள்) திட்டத்தின் பாரிய பதிப்பாக, ASEAN Seeds for the Future இனை செயற்படுத்தும் வகையில், இரு நிறுவனங்களின் தயார்நிலையை இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது. ஆசியான் அறக்கட்டளை மற்றும் Huawei ASEAN Academy ஆகியன இணைந்து ASEAN Seeds for the Future மூலம், பத்து ASEAN உறுப்பு நாடுகளில் உள்ள இளைஞர்களின் டிஜிட்டல் திறன்களை உருவாக்க தங்களை அர்ப்பணித்துள்ளன. இதன் மூலம் அவர்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சகாப்தத்தில் மேலோங்க முடியும்.

இந்நிகழ்வில் ஒன்லைன் மூலம் பங்குபற்றிய, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவின், தொழில்நுட்ப பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி புலஸ்தி குணவர்தன கருத்து தெரிவிக்கையில், “டிஜிட்டல் மாற்றத்தில் இலங்கை பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் 5G தொழில்நுட்ப வெளியீட்டின் போது, connectivity, cloud, AI, computing மற்றும் தொழில்துறை பயன்பாட்டு மென்பொருள்கள் ஒன்றிணைந்து, நாட்டிலும், பிராந்தியத்திலும் ICT துறைக்கான வாய்ப்புகளை உருவாக்கும். எனவே டிஜிட்டல் திறமையாளர்களை மேலோங்கச் செய்வதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், இலங்கையின் இளைய தலைமுறையினருக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அத்துடன் எமது உள்ளூர் திறமையாளர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு, இலங்கையில் டிஜிட்டல் திறமையாளர்களை மேம்படுத்துவதில் Huawei இன் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.” என்றார்

Photo Caption

Huawei சிரேஷ்ட பிரதித் தலைவரும் சபை உறுப்பினருமான Catherine Chen உச்சிமாநாட்டில் உரையாற்றும் போது
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ டிஜிட்டல் திறமையாளர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றிய போது…
Share

You may also like...